யோசேப்பு தன்னுடைய சகோதரர்களை சந்தித்தல் JOSEPH MEETING HIS BROTHREN 56-12-30 1. சற்றே பேசக் கூடிய சத்தத்தோடு...சில காலமாகவே எனக்கு தொண்டையில் இரணம் இருந்து வந்தது. மேலும்-மேலும், இந்தக் காலையில், எனக்கு ஒரு பயங்கரமான ஜலதோஷம் பிடித்துக் கொண்டது; நான் ஒவ்வொரு முறையும் இந்த பள்ளத்தாக்கிற்கு வரும்போது, எப்படியாவது அது போன்று ஆகிவிடுகிறது, நேற்று நான் நியூ ஆல்பனியில் உள்ள கட்டிடத்தின் உச்சியில் இருந்த சகோதரர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தபோது. இந்த பக்கம் நோக்கிப் பார்த்தேன். அப்பொழுது நான், "அங்கே இருந்த, அதுதான் காரணம்" என்றேன். இங்கே ஒரு மூடுபனி தொங்கிக் கொண்டிருக்கிறது, முழு நகரத்திலும் மாசு படிந்தது போன்று காணப்படுகிறது. நான் இதற்கு அருகாமையில் வந்தவுடனே, நான் இங்கே கீழே இறங்கினபோது, நான் உள்ளே வந்தவுடனே மீண்டும், பாருங்கள், அது செல்கிறது. ஓ, நான் எனக்காக ஒரு கூடாரத்தை எடுத்துக் கொண்டு, மலையின் உச்சிக்கு எங்காவது சென்று முகாமிட வேண்டும். காரணம், நாம் பரதேசிகளும் அந்நியர்களுமாயிருக்கிறோம், நாம் அப்படித்தானே? "தேவன் தாமே கட்டி உண்டாக்கின ஒரு நகரத்தைத் தேடுகிறோம்." அதைத்தான் நாம் நேசிக்கிறோம். இப்பொழுது நாம் சில... 2. இன்று காலை ஆராதனைக்கு முன்பும், ஞாயிறு பள்ளி போதனைக்கு முன்பும் நாம் குழந்தைகளின் ஒரு-ஒரு பிரதிஷ்டையை வைத்துள்ளோம். மாம்சப்பிரகாரமாக,என்னுடைய சகோதரன்; ஒரு சிறு குழந்தையை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்ய விரும்புகிறான். இங்குள்ள தாய்மார்களும், தகப்பன்மார்களுமாகிய உங்களில் சிலர் பிரதிஷ்டை செய்யப்பட ஒரு சிறு குழந்தையை வைத்திருக்கலாம். இப்பொழுது, வேதாகமத்தில் அநேக சமயங்களில்... 3. குழந்தை ஞானஸ்நானம் போன்றவற்றின் பேரிலான பல்வேறு கோட்பாடுகளின் காரணமாக, சபைகளில் நமக்கு ஏராளமான பிளவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், இப்பொழுது, அவைகளை எடுத்து, அவைகளை குழந்தை ஞானஸ்நானத்திற்காக தெளிப்பவர்கள், நீங்கள் அதை எந்த வழியில் பிரதிஷ்டை செய்ய விரும்புகிறீர்களோ, அதைப் பொறுத்தது. ஆனால், அந்த முழு காரியமும் ஒரு காரியத்தின் பேரில், கர்த்தருக்கென்று ஒரு பிரதிஷ்டை செய்வதையே குறிப்பிடுகிறது. பார்த்தீர்களா? இப்பொழுது... 4. ஏனென்றால் அந்தக் குழந்தை, பாவத்தைப் பொறுத்தமட்டில், அதற்கு பாவமே கிடையாது. இயேசு உலகத்தின் பாவங்களைப் போக்க மரித்தார். அந்தக் குழந்தை பாவம் செய்யவில்லை, அது மாத்திரமே...அது ஒரு பாவியாகும். அது பாவத்தில் பிறந்துள்ளது. ஆனால் கிறிஸ்து கல்வாரியில் மரித்தபோது, அவர் உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்தபடியால், அந்தக் குழந்தை பொறுப்புக்கூறும் வயதாகும் வரை பொறுப்பேற்க வேண்டியதில்லை. எந்த சிறு குழந்தையும், பெற்றோர் எவ்வளவு பாவமுள்ளவர்களாக இருந்தாலும், அது மரித்தவுடனே, அது நேராக கிறிஸ்துவின் கரங்களுக்கு செல்கிறது, பாருங்கள், ஏனென்றால் அவர் கிரயத்தை செலுத்தினார். அது பாவத்தில் பிறந்த ஒரு குழந்தையாயிருந்தாலும், விபச்சாரத்தினால் அல்லது அது என்னவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகி றதில்லை, அந்த குழந்தை கிறிஸ்துவோடு பத்திரமாக இருக்கிறது, ஏனென்றால் அவர் உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்க மரித்தார். அது இப்பொழுது போதுமான வயதாகும்போது, அது தனிப்பட்ட பாவத்தைச் செய்யும்போது, அப்பொழுது அது செய்ததற்காக அது மனந்திரும்ப வேண்டும். ஆனால் பாவம் செய்ய போதுமான வயதாகி, எது சரி எது தவறு என்பதை அறியும் வரை அதற்கு தனிப்பட்ட பாவம் என்பதே கிடையாது. ஆனால், இப்பொழுது, நாம் எப்படி என்று அறிந்துள்ளபடி, இந்தக் காரியங்களின் பேரில், நாம் எப்பொழுதுமே வேதாகமத்தோடு நெருக்கமாக நிலைத்திருக்க முயற்சிக்கிறோம். 5. இப்பொழுது, குழந்தைகளுக்கு தெளித்தல் என்பதற்கு எந்த வேதவாக்கியமும் வேதாகமத்தில் இல்லை. நாம் கண்டறிவது ஒன்றே ஒன்று......இல்லை, குழந்தை ஞானஸ்நானம் வேதாகமத்தில், எந்த ரூபத்திலும் இல்லை. வேதத்தில் இங்கே எழுதப்பட்டுள்ள ஒரே இடத்தை நாம் கண்டறிய முடியும், அதாவது இயே..."அவர்கள் சிறு பிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தனர், அவர் தம்முடைய கரங்களை அவர்கள் மேல் வைத்து, அவர்களை ஆசீர்வதித்து, சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வர இடங்கொடுங்கள், அவர்களைத் தடை பண்ணாதிருங்கள், பரலோக இராஜ்ஜியம் அப்படிப்பட்டவர் களுடையது" என்றார். 6. இப்பொழுது, அதாவது, இப்பொழுது, அவர் தேவனண்டை சென்று, இன்றைக்கு, அவருடைய மாம்சப்பிரகாரமான சரீரத்தில் தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார், அவர் தம்முடைய சபையை உலகம் முழுவதிலும் செல்ல கட்டளையிட்டுள்ளார் அவர் பூமியின் மேலிருந்தபோது, அவர் இங்கே துவங்கின கிரியைகளைத் தொடர்ந்து செய்ய, அதாவது சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல், வியாதியஸ்தரை சுகப்படுத்துதல், பிள்ளைகளை பிரதிஷ்டை செய்தல் போன்றவை, எனவே அன்பார்ந்தவர்கள் தங்களுடைய சிறு பிள்ளைகளை கர்த்தரிடம் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அவர்களை அவர்களுடைய மேய்ப்பரிடம், அவருடைய கரங்களில் கொடுத்து, அவர் அவர்களை விசுவாசத்தினால், கிறிஸ்துவண்டை எழுப்பி, அவர்களை ஆசீர்வதிக்கும்படி கிறிஸ்துவிடம் வேண்டுகிறார். 7. எனவே, நீங்கள் கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்யாத ஒரு சிறு குழந்தையை உடையவராயிருந்தால், நம்முடைய சகோதரி இசைப் பேழையை இசைக்கும்போது, அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், நாம் அதைப் பாடலாம். அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் என்ற பழைய பாடலை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அது அருமையாயுள்ளது. இப்பொழுது, திரு. மற்றும் திருமதி ஹென்றி பிரான்ஹாம் தங்களுடைய சிறிய குழந்தையை கொண்டு வருவார்கள். மற்ற எவரேனும் கொண்டு வர விரும்பினால், சரி, இப்பொழுது பிரதிஷ்டைக்காக இந்த நேரத்தில் அவர்களைக் கொண்டு வாருங்கள். சரி. 8. அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், பாவக் களங்களிலிருந்ததுஅவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்; அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், (....?....) 8. நான் உங்களுக்கு மற்றொரு குட்டி பிரான்ஹாமைக் காண்பிக்க விரும்புகிறேன், குட்டி மேரி எல்லா பிரான்ஹாம். அது என்னுடைய சகோதரனின் மகள் மற்றும் அவருடைய அன்புக்குரிய மனைவி. அதாவது, அவர்கள் இந்தக் காலையில் இந்த குட்டி நபரின் ஜீவியத்தை, அதை அவர்களுக்கு அளித்த, தேவனிடத்தில் திரும்ப அளிக்க, சபையில் முன்னோக்கி வந்துள்ளனர். இப்பொழுது நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோம். 9. எங்கள் தயவுள்ள பரலோகப் பிதாவே, மாம்சத்தில் என் சொந்த சகோதரனும், அவருடைய மணவாட்டியும், அவருடைய மனைவியுமாக, இன்றைக்கு இங்கே எனக்கு முன்பாக நிற்கின்றனர். அவர்களுக்கு முன்னால் உள்ள நாட்களில் அவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்படியாக, இந்த குட்டி மேரி எல்லாவையும் அவர்களுடைய வீடுகளை நீர் ஆசீர்வதித்திருக்கிறீர். இந்த குழந்தை எங்கிருந்து பிறந்தது என்பதை அவர்கள் நினைவு கூர்ந்ததற்காகவும், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், அவர்கள் அதை உம்மண்டை திரும்ப அளிக்கும்படியாக, இன்றைக்கு அதை சபைக்கு கொண்டு வந்ததற்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் இப்பொழுது விசுவாசத்தின் கரங்களில் குழந்தையை உம்மிடம் கொடுத்து, நான் வைத்துள்ள சிறுவனை ஆசீர்வதிக்கும்படி உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன். அது ஜீவித்து வளருவதாக. இயேசுவானவர் வரத் தாமதித்தால், அது உம்முடைய ஊழியக்காரனாக உமக்கு ஊழியம் செய்வதாக. 10. அதனுடைய தகப்பனையும் தாயையும் ஆசீர்வதியும். தேவனே, உம்முடைய பரிசுத்த ஆவியானவர் அவர்களை ஜீவியப் பயணத்தினூடாக வழி நடத்த அருள் புரியும். என்றாவது ஒரு நாளில், இந்த பூமிக்குரிய யாத்திரை முடிவடையும்போது, அந்த பெரிய குடும்பம் யாவரும் மகிமையில் ஒன்று கூடியிருப்பார்களாக. கர்த்தாவே, அதை அருளும். அந்த நேரம் வரையில், அந்தக் குழந்தை வளர்ந்து, தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, ஆரோக்கியமாயும், பெலனுள்ளதாயும், வரப்போகும் நாட்களில் பெண்மைக்கு உதாரணமாக இருப்பதாக. நாங்கள் உமக்கு துதி செலுத்துவோம். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் குழந்தையை இப்பொழுது உம்மிடத்தில் அளிக்கிறோம். ஆமென். 11. நான் அதை உங்களிடமே திரும்ப அளிக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. விலையேறப்பெற்ற நினைவுகள், அவைகள் எப்படி நீடித்திருக்கும், என் ஆத்துமாவுக்கு எங்கிருந்தோ அனுப்பப்பட்டேன்; அவர்கள் எப்பொழுதும், என் அருகில் நிற்கும்போது, விலையேறப்பெற்ற, புனிதமான காட்சிகள் வெளிப்படுகின்றன. 12. எல்லா சிறு பிள்ளைகளுக்காகவும் எங்களுடைய அருமையான கர்த்தரை நாங்கள் எவ்வளவாய்த் துதிக்கிறோம்! நாம் ஒரு காலத்தில் சிறியவர்களாக இருந்தோம் என்பது விசித்திரமாகத் தென்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு குழந்தையைக் குறித்த ஏதோ ஒரு காரியம் தன்னலமற்றதாயும், மிகவும் மன்னிக்கிறதாயும், மிகவும் தயவாயுமுள்ளது. நம்முடைய கர்த்தரும் கூட அவைகளுக்கு ஒப்பிட்டுப் பார்த்து, "நீங்கள் மனந்திரும்பி, இந்தச் சிறியரில் ஒருவரைப் போல் ஆகாவிட்டால்" என்று மிகவும் எளிதாகக் கூறினார். 13. என்னுடைய குட்டி ஜோசப்பை நான் கவனிக்கிறேன், அவன் எப்படியாய் ஒவ்வொரு காரியத்திலும் இருக்க வேண்டிய வயதில், தாய் அவனைத் திருத்த வேண்டும். மேலும் அவன் விளக்கை தூக்கியெறிந்து, அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அது தரையில் விழுவதை கேட்கவே அவ்வாறு செய்வான். அதன்பின்னர் அந்தத் தாய் அவனை அடிக்க நேர்ந்தால், அல்லது ஏதோ ஒன்று, அவன் அவளுடைய கரங்களில் ஏறிக்கொண்டு, தன்னுடைய கரங்களை இந்தவிதமாக அவளைச் சுற்றிப் போட்டுக் கொள்வான். 14. இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க, இந்த சிறு பிள்ளைகளாகிய நாம் ஒருவருக்கொருவர் மன்னிக்கப்பட வேண்டும். 15. இப்பொழுது, இந்த சிறு குழந்தைக்காக, குட்டி மேரி எல்லா பிரான்ஹாமிற்காக நாம் தேவனுக்கு நன்றி கூறுகிறோம். அது ஜீவித்து, வளர்ந்து, செழித்து, கர்த்தருடைய ஒரு ஊழியக்காரனாக இருப்பதாக. அது கிறிஸ்துவின் போற்றுதலுக்குள் வரும்படியாக, அது கிறிஸ்தவ வீட்டில் வளர்க்கப்படும் ஒரு வீடாயிருப்பதாக. 16. இப்பொழுது நாம்... (சகோதரி கெர்டி, உங்களுக்கு நன்றி.) பொழுது சிறு பிள்ளைகள் ஞாயிறு பள்ளி வகுப்புகளுக்கான அறையில் தங்களுடைய நிலையை எடுத்துக்கொண்டனர். 17. இன்றைக்கும், நாளையும், நாளை இரவும் ஆராதனைகள் எங்கு நடைபெறும் என்பதைப் பற்றிய அறிவிப்புகளை போதகர்- அளித்துள்ளார். இன்று பிற்பகல், அவர்கள்...எனக்குத் தெரிந்த வரையில், ஆராதனைகளுக்காக திறக்கப்படாது, லூயிவில்லில் உள்ள சிறு ஊழியங்கள் சிலவற்றைக் குறித்து நாம் அறிந்திருந்தாலொழிய, நம்முடைய சகோதரர் டர்பன் மற்றும் இன்னும் அநேகர். அவர்களுக்கு ஞாயிறு பிற்பகல் ஆராதனை உண்டு என்று நான் நினைக்கிறேன். 18. எனக்கு அநேக அழைப்புகள் வந்துள்ளன. அநேக ஜனங்கள் சுகவீனமாயும், அவதியுறும் மக்களுக்காக ஜெபிக்கப்படுவதற்காக பிரகாரங்களில் இருக்கின்றனர். 19. என்னுடைய அடுத்த ஆராதனைகள் டென்னஸியிலுள்ள கிளீவ்லேண்டில் அடுத்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வெள்ளி முதல் ஞாயிறு வரை நடைபெறும். 20. அதன்பின்னர் நாங்கள் வீட்டிற்கு வந்து, இந்தியானாவிலுள்ள சவுத் பெண்ட் சகோதரன் ஆர்.இ.எஸ்.டாம்ஸ் சாஸ்காட்சுவானில் உள்ள சாஸ்கடூனைச் சேர்ந்தவரோடு, அங்கே இரண்டு இரவுகள் ஆலய பிரதிஷ்டைக்காகவும் செல்கிறோம். 21. அதன்பின்னர், அங்கிருந்து, நாங்கள் மிக்சிகனில் உள்ள ஸ்டர்கிஸிற்கு இரண்டு இரவு ஆராதனைக்காக மிக்சிகனில் உள்ள ஸ்டர்கீஸ் என்ற இடத்திற்குச் செல்கிறோம். 22. அதன்பின்னர் ஓஹையோவில் உள்ள லிமாவில் உள்ள நினைவு அரங்கத்தில் உள்ள, பாப்டிஸ்டு ஜனங்களண்டை, ஓஹையோவிலுள்ள லைமாவிற்குச் செல்கிறோம். அது ஜனவரி இருபத்திமூன்றாம் தேதி தொடங்கி இருபத்தேழாம் தேதி முடிய உள்ளது. 23. அதன்பின்னர் அங்கிருந்து கலிபோர்னியாவிலும் அரிசோனாவிலும் நடைபெறும் பெரிய கூட்டங்களுக்கு நாங்கள் செல்கிறோம். எங்களுக்காக ஜெபத்தில் இரும். நாளை... 24. இன்றிரவு ஏழு முப்பது மணிக்கு இங்கே கூடாரத்தில் சுவிசேஷக ஆராதனைகள் நடைபெறும், ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். 25. நாளை இரவு, நான்...சகோதரன் காபிலுக்காக அவருடைய- அவருடைய நள்ளிரவு ஜாம ஆராதனையில் நான் பேசப் போகிறேன். நான்...என்னுடைய பகுதி ஒன்பது மணிக்கு துவங்கி ஏறக்குறைய ஒன்பது முப்பது மணி வரை இருக்கும். 26. அதன்பின்னர் நான் இங்குள்ள கூடாரத்திற்கு திரும்பி வருவேன், அங்கு ஏற்கனவே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும், நாளை இரவு ஆராதனையில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்ள, வருகை தரும் மேய்ப்பர்கள் மற்றும் போதகர்களோடு இங்கே இருக்கப்போகிறோம். நீங்கள் யாவரும் போதகர்கள் பேசுவதையும், புத்தாண்டை எப்படி துவங்க வேண்டும் என்றும், என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் வழிகளை, ஏன், வேதப்பூர்வ நிலைப்பாட்டில் இருந்து, வெளிப்படுத்துவதையும் கேட்க விரும்பினால், ஏன், நாளை இரவு இங்கே இருக்க வேண்டும். ஆராதனைகள் வழக்கம்போல் ஏழு முப்பது மணிக்கு துவங்கும். தொடர்ந்து நள்ளிரவு, ஞாயிறு இரவு, அதன்பின்னர்...இல்லை, சரியாகக் கூறினால், திங்கள் இரவு வரை தொடரும். அதன்பின்னர், ஒன்பது மணிக்குப் பிறகு, நான் சகோதரன் காபெல் அவர்களோடு பேசி முடித்த பிறகு, நான் நேராக இங்கே திரும்பவும் கூடாரத்திற்கு வந்து, ஒருக்கால், இந்தக் காலையில் நான் ஆரம்பிக்க விரும்புகிற பிரசங்கத்தை முடித்துவிடலாம். அல்லது, நான்...ஒருவிதமாக எனக்கு நீண்ட நேரம் எடுக்கும். 27. நான் மெதுவாகச் செயல்படுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் அது சரியான விதமான ஒரு அஸ்திபாரத்தின் மேல் இறங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே, அதை எங்கும் சிதறச் செய்ய வேண்டியதில்லை. அது அங்கேயே கிடக்க வேண்டும், அது வளர்ந்து கர்த்தருக்காக செழிப்படைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 28. இப்பொழுது, இந்தக் காலையில் இங்கே ஒரு - ஒரு ஊழியக்காரன் இருக்கிறான், ஒரு வாலிப ஊழியக்காரனாக இருக்க வேண்டிய ஒருவன், பெல் ஏர் தங்கும் விடுதியில் உள்ளதாக நான் நினைக்கிறேன். இன்று பிற்பகல் இரண்டு முதல் மூன்று மணிக்குள் நான் அவரைக் காண வேண்டும். இன்னும், அல்லது, அவர் இன்னும் உள்ளே இருக்கிறாரா? அந்த சகோதரனுடைய பெயர் என்ன என்பதை நான் மறந்துவிட்டேன். அவர் டென்னஸியிலிருந்து வருகிறார். அவர் என்னுடைய கூட்டத்தில், முதுகெலும்பு உடடைந்தவராயிருந்து சுக மடைந்து, ஊழியத்தில் பங்கு பெற்றார். இந்த சகோதரன், அங்கே. சரி. அது அருமையாயிருக்கிறது. அதாவது...அதாவது...அது இரண்டு முதல் மூன்று வரை, அதுவா? நான்...[அந்த சகோதரன், "மூன்று" என்கிறார்.-ஆசி.) மூன்று; மூன்று முதல் நான்கு வரை. சரி. 29. அதன்பின்னர் மற்றொரு ஊழியக்காரர் இருக்கிறார், அவர் இன்னும் இங்கே இருக்கிறாரா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. அவர் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து வருகிறார். ஒரு நாள், நான் சில குதிரைகளின் மேல், சில பெரிய கூடைகளை மாட்ட முயற்சித்துக் கொண்டிருந்தபோது, அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்று என்று நான் யூகிக்கிறேன்; பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த அளவுக்கு நீண்ட தாடியை வளர்த்து; வேட்டைப் பயணமாக சென்றிருந்தேன். ஒரு மனிதன் நடந்து வந்து, "நீங்கள் சகோதரன் பிரான்ஹாம் இல்லையா?" என்று கேட்டான். 30. நான் ஒரு கடையில் ஒரு வாலிபப் பெண்மணியை சந்தித்தேன், அவள் ஒரு பெரிய நகரத்தை, ஒரு... நகரத்தையே ஒருபோதும் கண்டதில்லை என்று கூறினாள். அவள் ஒரு பட்டிணத்திலிருந்து நானூறு அல்லது ஐநூறு மைல்கள் தொலைவில் இருந்தாள் என்று நான் யூகிக்கிறேன். ஒரு கடினமான சாலையிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்தில் ஈஸ்ட் பைன்ஸ் என்றழைக்கப்பட்ட ஒரு சிறு நகரத்தில் உள்ளது. அங்கே ஒரு கடை இருப்பதாக நான் நினைக்கிறேன். அங்கே பின்னால், இந்த தம்பதியினர் நடந்து சென்றனர். 31. அவர்கள் கியூபாவிற்கு செல்லும் தங்களுடைய பாதையில் உள்ளனர். வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து வந்துள்ள அவர்கள் இன்று காலை இங்கிருக்கிறார்களா என்று நான் எதிர்பார்க்கிறேன். சரியாக இங்கே. நல்லது, சகோதரனே, உங்களுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக. நீங்களும், உங்களுடைய மனைவியும், மிஷனரிமார்களும் பிரயாணம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று காலை நட்சத்திர விடுதியிலிருந்து என்னை அழைத்தார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நம்முடைய சகோதரர்கள் யாவரும் தங்களுடைய கரங்களைக் குலுக்க மகிழ்ச்சியடைவார்கள் என்பதை நான் அறிவேன். ஒரு புகைப்படத்தின் மூலம், அந்த முழு தாடியோடும் என்னை அடையாளம் கண்டு கொள்ள முடிந்த ஒரு மனிதன், ஒரு நல்ல பகுத்தறிதல் கொண்டவர். மிக அருமை. 32. அவர்கள் மிகவும் தீரமுள்ளவர்களாயிருந்தனர், ஜனங்களே இல்லாத இடத்தில், ஈஸ்ட் பைன்ஸில் ஏறுவது அரிது. அந்த தேசத்தினூடாக எவ்வளவு சில ஜனங்கள் உள்ளனர் என்று கூறுவது கடினமாயிருக்கும், ஆனால், அதே சமயத்தில், அவர்கள் அங்கே மிஷனரிகளாக இருந்து, தேவனுடைய மகிமைக்காக ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர். நான் நிச்சயமாகவே அவர்களை என்னுடைய முழு இருதயத்தோடு பாராட்டுகிறேன். நீங்கள் எல்லோரும் அவர்களுடைய கரங்களைக் குலுக்கி அந்த பெரிய வடமேற்கு தேசத்தைக் குறித்து கேட்க விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இப்பொழுது, அதன்பின்னர்... 33. திருமதி ராபர்ஸனின் தாயார் இன்னமும் மிகவும் சுகவீனமா யிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இன்று பிற்பகல் நான் அவளைப் பார்க்க வேண்டும், அவளுக்காக ஜெபிக்க வேண்டும் என்று நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அது...அதன்பின்னர், கர்த்தருக்குச் சித்தமானால், நான் மீண்டும் இன்றிரவு ஏழு முப்பது மணிக்கு இங்கு வருவேன். அங்கே பின்னால் உள்ள மக்ஸ்பாடின் திரும்பி வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன், நாங்கள் அவர்களுடன் சுமார் ஆறு மணியளவில் இரவு உணவிற்குச் செல்கிறோம், எனவே திரும்பி வர எங்களுக்கு அவகாசம் கொடுங்கள். 34. அதன்பின்னர் நாம் திருமதி பர்ன்ஸை சந்திக்க விரும்புகிறோம். இந்தக் காலையில் சகோதரன் பர்ன்ஸ் உள்ளே இருக்கிறாரா? அவர் இங்கிருக்கிறாரா? ஆம். சகோதரன் பர்ன்ஸ், நீங்கள் உட்கார்ந்து கொண்டிருந்ததை நான் காணவில்லை. சகோதரி பர்ன்ஸ் மிகவும் சுகவீனமாயிருக்கிறார், மிகவும் சுகவீனமாயிருக்கிறார். 35. அன்றொரு மாலை நான் அவளைப் பார்க்க சென்றிருந்தேன், அவள் மிகவும் சுகவீனமாயிருக்கிறாள். அவள் ஒரு தீரமான ஆத்துமாவாக இருக்கிறாள். ஒவ்வொருவரும் எப்பொழுதும் தேவனை பற்றிக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஏனென்றால் இங்கே யார் இருப்பார்கள் என்பதை அறியாமல், இந்த விதத்திலிருந்து அதை வெளிப்படுத்திக் கூறுகிறோம். ஆனால் சகோதரி பர்ன்ஸை மீண்டும் சபைக்கு கொண்டு வர தேவனுடைய அற்புதம் தேவைப்படும். அது உண்மை. 36. அவளுடைய அன்புக் கணவன் மருத்துவமனையிலிருந்து வெளியேறியபோது, முன்னாள் படைவீரர் மருத்துவமனையில், புற்று நோயால், மரிக்கும்படி ஆக்கினைக்குட்படுத்தப்பட்டார், தேவன் அவனை சுகப்படுத்தினார். இதோ அவர் மீண்டும் சபையில் இருக்கிறார், இந்த விதமான நேரத்தில் எதிர்பார்க்கப்படக் கூடியபடி மீண்டும் மிக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பும், அதேக் காரியம், புற்று நோயுடன் கூடிய பெரிய வீங்கின மண்ணீரலை கர்த்தர் அவருக்குக் குணப்படுத்தியபோது. 37. சகோதரன் உட் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தபோது, அதே நேரம் எனக்கு நினைவிருக்கிறது. நான் ஒரு சிறு விடுமுறையில் இருந்தேன். நாங்கள் அணில் வேட்டைக்காக காடுகளில் இருந்தபோது, ஏதோ ஒன்று என்னிடத்தில், "வீட்டிற்கு போ" என்றது. நான் வீட்டிற்கு சென்றேன். நான் ஏன் லூயிவில்லுக்கு செல்ல வேண்டியதாயிருந்தது என்பதை என்னால் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டேன். சகோதரன் உட், லூயிவில்லைச் சுற்றி வளர்ந்தவரே, தவறான பாதையில், சுற்றி, சுற்றி, சுற்றி, என்னை அழைத்துச் செல்ல முயன்றார். தேவன் என்னை ஒரு மூலையில் பிடித்து வைத்துக் கொண்டு, சகோதரி பர்ன்ஸ் என்னிடம் கூறுவதற்காக காத்துக் கொண்டிருந்தார். அது அவள்தான், அந்த தீரமான பெண்மணி, நாங்கள் அங்கு சென்று ஜெபித்தபோது, அவளுடைய கணவர் அங்கே மருத்துவமனையில் மரித்துக் கொண்டிருக்கிறார் என்று என்னிடம் கூறப்பட்டது. 38. அவள் கீழே அமர்ந்து, கர்த்தர் அக்னி ஸ்தம்பத்தோடு எடுத்துக்கொண்ட அவருடைய அந்தப் புகைப்படத்தை எடுத்தாள்... நீங்கள் எல்லோரும் அதைப் பார்த்திருக்கிறீர்கள் என்று, நான் நினைக்கிறேன். அதைத் தரையில் வைத்துக் கொண்டாள். மேலும் அவள், "அன்புள்ள பரலோகத்தின் தேவனே, சகோதரன் பிரான்ஹாமை உடனடியாக கண்டுபிடிக்க எனக்கு உதவி செய்யும். நான் அதை செய்ய வேண்டும்" என்றாள். அப்பொழுது அவள், "தேவனுடைய தூதனே, இவரிடம் என்னை வழிநடத்தும்" என்றாள். அதுதான் அதற்குத் தேவை. அவள் எழும்பி, ஒரு உபயோகக் கட்டணத்தைச் செலுத்த நகரத்திற்குச் செல்கிறாள், அப்பொழுது விநோதமாக மற்றொரு மூலைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். தேவன் என்னை காட்டிலிருந்து லூயிவில்லுக்கு அனுப்பி, அரை மணி நேரம் என்னை அந்த மூலையில் நிறுத்தி வைத்து, சகோதரன் உட் அவர்கள் தவறான மூலையை எப்பொழுதும் திருப்புவதை கவனித்துக் கொண்டிருந்தார், அவர் என்னை அழைத்துச் செல்ல முயன்றார். பார்த்தீர்களா? 39. இப்பொழுது, தேவன் தம்முடைய சிறிய மகள் அங்கே எங்கே கிடத்தப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம், நீங்கள் விசுவாசமுள்ள ஜெபத்தை ஜெபிக்கும்படி அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். 40. தலை மட்டுமல்லாமல், இருதயங்களும் வணங்கியிருப்பதோடு, நாம் இந்தக் காலையில் மற்றொரு காரியத்தைக் கூற விரும்புகிறோம், நான் என் வாழ்க்கையில் எப்போதும் சந்தித்ததிலேயே மிகவும் விசுவாசமுள்ள மனிதர்களில் ஒருவரான...அவர்களில் ஒருவர், நம்முடைய சகோதரர் ஹிக்கின்பாதம். அவருடைய.. நம்முடைய அன்புக்குரிய சகோதரி கர்த்தராகிய இயேசுவோடு இருக்கும்படி சென்றிருக்கிறாள். ஒரு தீரமான தேவனுடைய போர்வீரன்; அவள் பீடத்தண்டை வந்ததை நான் எத்தனை முறை கண்டிருக்கிறேன்! எப்பொழுதுமே இந்த ஜெப வரிசையை அடைய வேண்டும் என்பதே அவளுடைய ஏக்கமாயிருந்தது, அங்கே பரிசுத்த ஆவியானவர் அவளுக்கு தொல்லை என்னவாயிருந்தது என்பதை கூறுவார். அவள் அதைச் செய்ய வாஞ்சித்தாள். அவள் இங்கே இந்த மேடையின் வழியாக எத்தனை முறை நடந்து வந்து, பகுத்தறிதல் வருமா என்று கண்டறிய முயற்சித்துக் கொண்டிருந்தாள். மற்ற கூட்டங்களிலும், பல்வேறு இடங்களிலும் அவள் முயற்சித்திருக்கிறாள், ஆனால் அது எப்படியோ, வெறுமனே வரவில்லை. 41. அதன் பின்னர், ஒரு சில வாரங்களுக்கு முன்னர், அங்கே மருத்துவமனைக்குள் நடந்து சென்றபோது, அவள் சுகவீனமா யிருந்ததை நான் கேள்விப்பட்டபோது, மேலும் மாலை நேரமாகிவிட்டது. நான் மருத்துவமனைக்குள் சென்று, அவளுடைய பக்கத்தில் அமர்ந்தபோது, அங்கே பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார்; மீண்டும் ஜீவனுக்குள் சென்று ஒவ்வொரு காரியத்தையும் கொண்டு வந்து, தொல்லை இருந்த இடத்தை சரியாகக் கூறினார். ஆனால், வினோதமான காரியம் என்னவெனில், சகோதரி ஹிக்கின்பாதம் இங்கே இனிமேல் தங்கியிருக்க விரும்பவில்லை. அவள் தொடர்ந்து செல்ல விரும்பினாள். ஏதோ ஒன்று அவளை அழைத்துக் கொண்டிருந்தது. அவள் தேவனோடு இருக்கும்படி அன்றொரு நாள் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாள். நான் அதை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன். ஆம். [ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி.) 42. நீங்கள் நகரத்திற்குள்ளாக வரும்போது நீங்கள் மோசமாக உணருவதில் வியப்பொன்றுமில்லை; அது சுவிசேஷத்தை புறக்கணித்துள்ளது. அதுதான் காரியம். அவள் அழிந்துபோகிறாள். இதற்கு முடிவு கட்டும் வரைக்கும் '37 ஜலப்பிரளயம் ஒன்றுமே இருக்காது. ஆனால், ஆம், அது முற்றிலுமாக அழிந்துபோயுள்ளது. அந்தக் காரணத்தினால்தான் சுவற்றில் கையெழுத்து எழுதப்பட்டுள்ளது. 43. இப்பொழுது, அது மிகவும் மோசமாக உள்ளது. நாங்கள் இங்குள்ள சொத்துக்களையும், காரியங்களையும் உடையவர்களாயிருக்கிறோம், ஆனால் அன்றொரு நாள் நம்முடைய சகோதரர்களில் சிலர் அங்குள்ள சபையின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தியதற்கான ஒரு அபராத சீட்டை பெற்றுள்ளதாக நான் கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட ஒரு அவமானம்! அது என்னவென்று நீங்கள் எனக்குத் தெரியப் படுத்தினால், நான் அந்த அபராத சீட்டிற்கு பணம் செலுத்துவேன். அது ஒரு பரிதாபம். ஆம், ஐயா. பாருங்கள், நாம், இது, நான் நினைக்கிறேன்...நாம் இன்னமும் அதற்கு சொந்தக்காரர் என்று நான் நினைக்கிறேன். குறைந்த பட்சம் அந்த பத்திரமாவது அவ்வாறு கூறுகிறது. இங்கே இதைப் பாருங்கள், ஒரு வேளை உங்களுக்கு அங்கே ஒரு அபராத சீட்டு கிடைக்காமல் போகலாம். ஆனால் அவர்கள் அபராத சீட்டுகளை கொடுக்காத ஒரு இடத்திற்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அவ்வாறில்லையா? அது உண்மை. அற்புதமானது. ஆம், உண்மையாகவே. இப்பொழுது, நான்... 44. நான் இந்தக் காலையில், சற்று நேரம் பேச முயற்சிக்கப் போகிறேன், ஏனெனில் எனக்கு உண்மையாகவே ஜலதோஷம் பிடித்திருந்தபடியால், அடைத்துக்கொண்டது. கர்த்தருக்கு சித்தமானால், நான் பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு பொருளை எடுத்து, சிறிது நேரம் போதிக்க விரும்புகிறேன். பின்னர் ஒருவேளை, இன்றிரவு, திரும்பி வந்தால், கர்த்தருக்கு சித்தமானால், சரியான நேரத்தில் திரும்பி வந்து, மிகவும் களைப்படையாமல் இருக்கலாம். 45. ஓ, நானும் கூட, சற்று யோசிக்க நேர்ந்தது. இங்கே அமர்ந்துள்ள சகோதரன் கெல்லி, சகோதரி கெல்லி, உடனே மேலே வர வேண்டும், சரியாக...நீங்கள் இரவு உணவுக்குப் பிறகு, உங்களால் முடிந்தளவு துரிதமாக வாருங்கள், ஏனென்றால் சகோதரன் கெல்லி, நான் இந்த பிற்பகலில் அநேக காரியங்களோடு உண்மையாகவே வெளியே சென்றேன். அன்றொரு இரவு, எனக்கு நினைவிருக்கிறது, அங்கே, நீங்கள் அனைவரும் உள்ளே வரும்போது நான் ஒரு அழைப்பின் பேரில் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். சரி. [ஒரு சகோதரி, "சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் வருவீர்களா?" என்று கேட்கிறாள்.-ஆசி.) இப்பொழுது, அது-அது பரவாயில்லை, சகோதரியே. 46. இப்பொழுது, அப்படியானால், எனக்காக கர்த்தருடைய, என்னுடைய தீர்மானங்கள், என்னால் முடிந்தளவு மிகச் சிறந்ததாக இருக்கும். ஜெபியுங்கள்... அவருக்காகவே, 47. இப்பொழுது, நாம் பழைய புத்தகத்தை, பழைய, கடைசி... முதல் புத்தகத்தை, ஆதியாகமம் 35, நாம் இங்கே ஆதியாகமப் புத்தகத்திலிருந்து வேதவாக்கியங்களின் ஒரு சிறு பகுதியை வாசிக்க விரும்புகிறோம். நாம் போதிக்க விரும்புகிற ஒரு காரியத்தின் பின்னணியில் தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை நிறைவாக சேர்க்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 48. எத்தனை பேர் ஞாயிறு பள்ளியை விரும்புகிறீர்கள்? ஓ, அது ஒரு...அது முதலில் எங்கிருந்து தோன்றினது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? நான் ஒரு கையையும் காணவில்லை. அது ஒருவிதமாக...அது முதலில் என்னவென்று அழைக்கப்பட்டது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? என் மனைவி எங்கே? அவள் அதை அறிந்திருக்க வேண்டும். சரி. அது... 49. (சகோதரன் நெவில், "சகோதரன் பிரான்ஹாம்?" என்று கேட்கிறார்-ஆசி.) சரியா? ["மிஷன்-...இந்த காலையில் இங்கே மற்றொரு மிஷனரி.") மற்றொரு மிஷனரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ("சகோதரன் நாபர்.") சகோதரன் யார்? ("சகோதரன் நாபர்.") சகோதரன் நாபர், அவர் எங்கே இருக்கிறார்? சகோதரன் நாபர், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது உங்களோடு இருக்கிற உம்முடைய மனைவியா? அது மிகவும் அருமையானது. இந்தக் காலையில் நீங்களும் உங்களுடைய குடும்பத்தினரும் எங்களோடு இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சிய டைகிறோம். நீங்கள் தேவனுடைய சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் இருக்க வேண்டும், நீங்கள் ஒரு மிஷனரியாக இருக்கும்போது, நீங்கள் பாருங்கள். காரணம், "உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" என்பதே பொதுவான கட்டளை. 50. ஒரு மிஷனரியாக இருக்கிற ஒரு மனிதன்! இப்பொழுது, நான்- நான் அதிகம் கவலைப்படுகிறதில்லை...மிஷினெரி என்பது ஒரு அருமையான வார்த்தை, ஆனால் நான் அதற்கு ஒரு மேலான வார்த்தையை வைத்திருக்கிறேன். நீங்கள் ஒரு அப்போஸ்தலன். பார்த்தீர்களா? அது உண்மை. இப்பொழுது, அப்போஸ்தலன் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? "அனுப்பப்பட்ட ஒருவன்." மிஷனரி என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? "அனுப்பப்பட்ட ஒருவன்.' அதே காரியம் தான். எனவே மிஷனரிமார்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள், மேய்ப்பர்கள் ஆகியோர் சபையை உருவாக்கியுள்ளனர். அது சரியா? அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள்...அவர்கள் அழைக்கிறார்கள். எனவே, நீங்கள் ஒரு மிஷனரியாகவோ அல்லது ஒரு அப்போஸ்தலனாகவோ இருக்கும் வரையில், நீங்கள் ஒரு ஊழியத்திற்காக தேவனால் அனுப்பப்பட்ட ஒருவராக இருக்கிறீர்கள், நீங்கள் எப்பொழுதுமே சரியாக இருக்கிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக என்பதே என்னுடைய-என்னுடைய ஜெபமாயுள்ளது. 51. சகோதரன் மற்றும் சகோதரி ஃபாஸ் அவர்கள் கியூபாவிற்கு, ஊழியக்களங்களுக்கு தங்களுடைய வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். வடக்கின் உறைபனிப் பகுதிகளிலிருந்து, தெற்கின் வெப்பமண்டல காடுகளுக்குச் செல்கிறார்கள், ஏனென்றால் இந்த சுவிசேஷம் உலகம் முழுவதிலும் பிரசங்கிக்கப்பட வேண்டும். ஆமென். என்னே ஒரு மாற்றம்! 52. சகோதரனே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? [அந்த சகோதரன், "சகோதரனே, இப்பொழுது நான் இஸ்ரவேலுக்குப் போகிறேன்" என்கிறார்.-ஆசி.) இஸ்ரேலுக்குச் செல்லுதல். 53. ஓ, நான் விரும்புகிறேன்...அங்கே பின்னால் அமர்ந்துள்ள மேபலைப் பாருங்கள், நான் உங்களுக்காகப் பாட, என்னுடைய மனைவியையும் மேபலையும் அழைப்பேன்: அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர், அவர்கள் தூர தேசங்களிலிருந்தும், இராஜாவுடன் விருந்துண்ண, அவருடைய விருந்தினராகப் போஜனம்பண்ண; இந்த யாத்திரிகர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்! அவருடைய பரிசுத்தமான முகத்தைப் பார்க்கையில், தெய்வீக ஒளியினால் பிரகாசிக்கிறது; அவருடைய கிருபையில் பங்குபெறும் பாக்கியவான்கள், அவருடைய கிரீடத்தில் இரத்தினங்களாக பிரகாசிப்பார்கள். 54. அந்நாளில் அது அற்புதமாயிருக்குமல்லவா! ஆமென். இஸ்ரவேலுக்கு போகிற உங்களை, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக; நீங்கள், நீங்கள் போகப்போகும் இடத்திற்கு; இந்தக் காலையில் சகோதரர்களாகிய உங்களுக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள். ஆமென். 55. இப்பொழுது, நாம் வேதாகமத்தை திறக்கும் முன்னர்...இது பாடப்பொருளாய் உள்ளது என்பதை நாம் அறிவோம், தேவன் அந்த வரிகளுக்கு இடையே உள்ள சூழலை எழுதினார், நீங்கள் பாருங்கள். ஆகையால் நாம் பாடப்பொருளை வாசித்து, தேவன் நமக்கு சூழலை அளிக்கட்டும். எனவே நாம் நம்முடைய தலைகளை சற்று நேரம் ஜெபத்திற்காக வணங்குவோமாக. 56. எங்கள் பரலோகப் பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், நாங்கள் இப்பொழுது வாசிக்கப்போகும் இந்த வார்த்தைகளை நீர் எடுத்து, அவைகளை எங்களுடைய இருதயங்களில் சரியாக விளக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் மென்மையாய், அமைதியாய், தாழ்மையாய், பயபக்தியாய் உம்முடைய பிரசன்னத்திற்குள்ளாக வருவோமாக. பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை எடுத்து ஒவ்வொரு இருதயத்தையும் போஷிப்பாராக. கர்த்தாவே, நீர் என்னுடையதையும் அங்கே சேர்த்துக் கொள்வீரா? ஏனென்றால் நான் இதை கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். 57. சரி, நாம் இங்கே ஒரு வசனத்தை அல்லது இரண்டு வசனங்களை வாசிப்போம். ஆதியாகமம் வித்தான அதிகாரம் என்பதை, நாம் அறிவோம். சரி. நாம் 15-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான். அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான். அந்த மனிதன்-அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டு பிடித்தான். அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி, ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான், 58. கர்த்தர் அவருடைய வார்த்தைக்கு ஆசீர்வாதங்களை அளிப்பாராக. இப்பொழுது, ஆதியாகமம் எப்பொழுதுமே எனக்கு... 59. அது என்ன அதிகாரம் என்று நான் உங்களுக்கு கூறினேனா? அது ஆதியாகமம். நான் ஆதியாகமம் 37-ம் அதிகாரம், 15-ம் வசனம் துவங்கி அதைக் கண்டேன் என்று நினைக்கிறேன் நீங்கள் அதை குறித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம்...சற்றுமுன், 35-ம் அதிகாரம் என்று நான் கூறினேன் என்று நான் நினைக்கிறேன். எனக்கு இரண்டு பக்கங்கள் ஒன்றாக இருந்தன. நான்-நான் வருந்துகிறேன். இந்த சிறிய பழைய ஸ்கோபீல்டு வேதாகமம், அது எனக்கு ஒருவிதமாக படிக்க கடினமாக உள்ளது, ஏனென்றால் நான் நாற்பது வயதைக் கடந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னுடைய... 60. அவர்கள் என்னிடம் வாசிக்கும் கண்ணாடியை வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் சென்று என்னுடைய கண்களை பரிசோதித்துக்கொண்டேன், நான் என்னுடைய வேதாகமத்தை என்னிடத்திலிருந்து தள்ளிக்கொண்டே செல்ல வேண்டியதாயிருந்தது. சிறிது நேரம் கழித்து அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள என்னுடைய கரம் போதாது என்று மருத்துவர் என்னிடம் கூறுகிறார். நான்...எனக்கு வாசிப்பதற்கு கண்ணாடி தேவை என்று கூறினார். நான் என்னுடைய கண்களை சோதித்தபோது, அவர்கள் சரியாக பத்துக்கு-பத்து என்ற விதத்தில் சோதித்தனர். ஆனால் அங்கே எங்கோ ஒரு முடியானது தரையில் கிடப்பதை என்னால் காண முடிந்தது. ஆனால் அதை எனக்கு அருகாமையில் வையுங்கள்...அவர், "நீங்கள் வரும்போது..." என்று கூறி, "உன்னுடைய தலைமுடி நரையாகக் காரணம் என்ன?" என்று கேட்டார். அதற்கு நான், "எனக்குத் தெரியாது" என்றேன். 61. அதற்கு அவர், "இது வயோதிக காலம்" என்றார். ஹா-ஹா-ஹா! அவர், "நீங்கள் நாற்பது வயதைக் கடக்கும்போது, அதுதான் ஒரு நபரின் கண்களில் கோளாறு ஏற்படுகிறது. நீங்கள், உண்மையாகவே, உங்களுடைய கண் இமைகள் தட்டையாகிவிடுகின்றன. நீங்கள் அதைச் சமாளிக்க வேண்டும், அவ்வளவுதான்" என்றார். நான் அதை தொடர்ந்து தள்ளிப் போடுகிறேன். மேலும், அதை வாங்கும்படிச் செல்ல எனக்கு நேரமில்லை, ஆனால் என்றோ ஒரு நாள் நான்- நான் அதிகமாக போதிக்கும்போது, வாசிப்பதற்கான இந்த கண்ணாடியை வாங்கிக் கொள்வேன். ஆனால் இப்பொழுது நான் ஒரு பாடப் பொருளை வாசித்துவிட்டு தொடர்ந்து செல்கிறேன். இது..பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வேதாகமத்தை நான் பெற்றுக் கொண்டேன். அது உண்மையாகவே, மிக சிறியதாக அச்சிடப்பட்டுள்ளது. 62. இப்பொழுது, ஆதியாகமத்தில், ஆதியாகமம் என்றால் "தொடக்கம்" என்று பொருள்படுகிறது, வித்து அதிகாரம். நினைவிருக்கட்டும், அதாவது, இன்றைக்கு உள்ள ஒவ்வொரு காரியமும், உண்மையாகவே ஆதியாகமத்தில் துவங்கினது. அது எல்லாக் காரியங்களுக்கும் துவக்கமாயிருந்தது. அது இரட்சிப்பின் துவக்கமாயிருந்தது. அது பாவத்தின் துவக்கமாயிருந்தது. அது எல்லா கோட்பாட்டு முறைகளுக்கும் துவக்கமாயிருந்தது. அதுவே உண்மையான சபையின் துவக்கமாயிருந்தது. அது கள்ள சபையின் துவக்கமாயிருந்தது. அது நீதியின் துவக்கமாயிருந்தது அது வஞ்சகத்தின் துவக்கமாயிருந்தது. அது ஆதியாகமத்தில் துவங்கின எல்லாக் காரியங்களின் துவக்கமாயிருந்தது. 63. இந்த ஒரு பொருளின் பேரில் சரியாக தரித்திருந்து, அதை அப்படியே ஆராய்ந்து பார்க்க, இதன் பேரில் சுமார் மூன்று மாதங்கள் நாம் தரித்திருக்க நான் விரும்புகிறேன், அதை பரிசுத்த ஆவியினால், தேவனுடைய கயிறுகளினால் கட்டி, அதை ஒன்றாக இணைக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் மற்ற வார்த்தைகளோடு எவ்வாறு பொருந்துகிறது என்பதைக் கவனியுங்கள். அப்படிப்பட்ட ஒரு அழகான காரியம்! 64. தேவனுடைய வார்த்தை மிகவும் எழுச்சியூட்டுகிறதாயிருக்கிறது! எந்தக் காலத்தில், எந்தக் காலமாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, ஒவ்வொரு மனிதனும் இந்த வேதப்பகுதியை வாசித்திருந்தாலும்...இப்பொழுது அநேக நூற்றுக்கணக்கான, ஆம், ஏறக்குறைய மூவாயிரத்திற்கும் அதிகமான வருடங்களாக அது எழுதப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலத்திலும் இந்த வேதவாக்கியத்தை வாசிக்கும் ஒவ்வொரு மனிதனும் வேதத்தின் ஒவ்வொரு வசனத்திலிருந்தும் ஏவப்பட்டிருக்கின்றனர், பாருங்கள். அதனுடைய ஸ்தானத்தை வேறெதுவுமே எப்போதும் எடுத்துக்கொள்ள முடியாது. 65. வேறொரு நாளில் எழுதப்பட்ட ஒரு எழுத்து, அந்த காலத்திற்காகவும், அதனுடைய நோக்கத்திற்காகவும் வாசிக்கப்படும்போது, அது தீர்க்கப்படுகிறது. நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி, "என்னுடைய அன்பாரர்ந்த அருமையான சகோதரனே, இன்றைக்கு நான் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று, ஒரு நேரத்தில் இன்ன-இன்னதை, செய்திருக்கிறேன்" என்று கூறலாம். அது நேரடியாக உங்களைச் சென்றடைகிறது, அதுவே இதற்கு தீர்வாகிறது. ஒருக்கால் நீதிமன்ற அத்தாட்சிக்காகவோ அல்லது வேறெந்த காரியத்திற்காகவோ, அது எனக்கு எதிராகவோ அல்லது எனக்காகவோ எனக்கு ஏதாவது ஒன்றை நிரூபிக்க அல்லது எனக்கு எதிராக ஒன்றை நிரூபிக்க இருக்கலாம், ஆனால் அது உங்களுக்கு அளிக்கப்படும்போது இருக்கும் நேரடியான செய்தியாக இருக்காது. 66. ஆனால் வேதமோ அவ்வாறில்லை. அது மானிட வர்க்கத்திற்கும், எல்லாக் காலங்களுக்கும், எல்லா காலங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஏனென்றால் அது எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையாயுள்ளது. பார்த்தீர்களா? அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் தவறிப்போக முடியாது. அவைகள் ஒருபோதும் மரித்துப்போகாது, என்றென்றைக்குமாய் ஒரு நித்தியம் இருக்கும் வரை, இவைகள் இன்னமும் அதே அர்த்தங்களை உடையதாயிருக்கும், ஏனென்றால் அவைகள் ஒருவிசை தேவனுடைய உதடுகளிலிருந்து வந்தவை. பார்த்தீர்களா? தவறிப்போக முடியாது! தேவனுடைய வார்த்தை எவ்வளவு நித்தியமானது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவைகளே ஜீவனாயிருக்கின்றன. 67. இப்பொழுது, ஒரு வார்த்தை என்றால் என்ன? வார்த்தை என்பது வெளிப்படுத்தப்பட்ட ஒரு எண்ணமாகும். தேவன் ஒருமுறை எந்தக் காரியத்தையாவது நினைக்கும்போது, அது ஒரு சிந்தனையாகவே இருக்கிறது. ஆனால் அது வெளிப்படுத்தப்படும்போது, அது ஒருபோதும் மாற்றவோ அல்லது மாறவோ முடியாது. அது என்றென்றைக்குமாய் நிலைத்திருக்க வேண்டும். 68. காரணம், உங்களுடைய வார்த்தை உங்களைப் போலவே உள்ளது. அவர் எவ்வளவு நல்லவராக இருக்கிறாரோ, அவ்வளவு நல்லதாகவே தேவனுடைய வார்த்தை உள்ளது. உங்களுடைய வார்த்தை உங்களுடைய ஒரு பாகமாக இருக்கிறது. உங்களுடைய வாக்குறுதி உங்களைப் போன்றதாகவே உள்ளது. தேவனுடைய வாக்குத்தத்தம் அவரைப் போன்றே நல்லதாகவே உள்ளது. 69. இப்பொழுது, நீங்கள் ஒரு சாவுக்கேதுவானவர் என்ற காரணத்தால், நீங்கள் ஒரு வாக்குத்தத்தம் செய்து, அதை மீறிவிடலாம், ஏனென்றால் நீங்கள் ஒரு சாவுக்கேதுவானவர். நான் ஒரு சாவுக்கேதுவானவன். ஆனால், தேவனோ, அழிவில்லாதவராயும், முடிவற்றவராயும், சர்வ வல்லமையுள்ளவராயும், சர்வ வியாபியாய் இருக்கிறார், அவர் ஒரு வாக்குமூலத்தை அளிக்கிறார், அவர் துவக்கத்திலிருந்து முடிவுவரை அறிந்திருக்கிறார், அவரால் அதைக் காத்துக்கொள்ள முடியும். 70. ஆபிரகாம் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைத்தான், ஏனென்றால் தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்ததை, தேவன் நிறைவேற்ற வல்லவராயிருந்தார் என்றும் முழு நிச்சயமாய் நம்பினான், ஏனெனில் என்ன நடக்கப் போகிறது என்பதை அவர் அறிந்திருந்தாலொழிய, அவர் ஒருபோதும் வாக்குத்தத்தம் செய்திருக்கமாட்டார். 71. அப்படியானால் நாம் எப்படி அவருடைய வார்த்தையின் பேரில் சார்ந்திருக்க முடியும் என்று பார்த்தீர்களா? எவ்வளவு கடுமையான புயல் வீசினாலும், என்ன முரண்பாடாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, வார்த்தையின் பேரில் பயபக்தியுடன் சார்ந்திருங்கள். புயலின் மறுபக்கத்தை கண்டிருக்கிற, தேவன் அதைக் கூறினார். பார்த்தீர்களா? ஆகையால், நீங்கள் சுகவீனமாயிருந்தால், உங்களுடைய ஆத்துமாவை இளைப்பாறுதலின் துறைமுகத்தில் நங்கூரமிடுங்கள். நீங்கள் குழப்பமடைந்து, துயரமடைந்திருந்தால், அவர், "உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருப்பேன்" என்று கூறினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்...அவர், "கர்த்தரில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்" என்றார், எனவே அங்கேயே நிலைத்திருங்கள். 72. ஒரு மனிதன் எழுதினான், ஒரு புலவன், "திரைக்குள் என் நங்கூரம் பற்றிக்கொண்டிருக்கிறது" என்று எழுதினான். ஒரு திரை என்றால் என்ன? அது அங்கிருந்து இங்கே அடைக்கப்பட்ட ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. நங்கூரம் திரையின் உட்புறத்தில் உள்ளது. அது எப்படி இருக்கப் போகிறது என்பதை நீங்கள் காணமாட்டீர்கள், ஆனால் ஏதோ ஒன்று உங்களை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், அது அங்கே ஒரு பற்றிப் பிடித்திருக்கிறது. 73. கடல் கொந்தளித்து கொந்தளிக்கும் போது, நீங்கள் எப்போதாவது... உங்களில் சிலர் ஒரு கப்பலில் நங்கூரமிடப்பட்டிருப்பதைக் காண ஒருபோதும் சிலாக்கியம் பெற்றிருக்கமாட்டீர்கள் என்று நான் யூகிக்கிறேன். ஓ, என்னே! அவர்கள் அந்த விதமாக ஒரு கடல் நங்கூரத்தை வீசியெறிந்தபோது, நான் சவாரி செய்திருக்கிறேன், அந்த அலையின் உச்சிக்கு கூட செல்ல முடியவில்லை. அது அலையினூடாகச் செல்லும். ஆனால் நங்கூரம் பிடித்திருக்கும் வரை, அது மாத்திரமே எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறது. 74. நாம் அதைக் கடந்து சென்றாலும், அதன் கீழானாலும், அதைச் சுற்றிப் பார்த்தாலும் அல்லது அதனூடாகச் சென்றாலும் பரவாயில்லை; நங்கூரம் பற்றி நிற்கிறது. அந்தவிதமாகவே ஜீவியத்தின் புயல்கள் நம்மை அசைக்கத் துவங்குகின்றன. நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கலாம், நாம் கடந்து, கீழே, சுற்றிச் செல்ல வேண்டியிருக்கலாம், ஆனால் நங்கூரமானது திரைக்குள்ளாக, காணக்கூடாதவரை பற்றிக்கொள்ளட்டும். அது எங்கே உள்ளது என்பதை நாம் சரியாக அறியோம், ஆனால் அது ஒரு பற்றிப்பிடித்தலாய் உள்ளது. 75. அந்த காத்தாடியை வைத்திருந்த சிறு பையனைப் போன்றே, உங்களுக்குத் தெரியும். நீங்கள் அந்த பழைய பழமொழியைக் குறித்த, கதையைக் கேட்டிருப்பீர்கள். ஒருவர், "அங்குள்ள ஒரு முனையில் நீங்கள் ஒரு காத்தாடி வைத்திருப்பதை எப்படி அறிவீர்கள்?" என்று கேட்டார். அவன், "அது இழுப்பதை என்னால் இன்னமும் உணரமுடிகிறது" என்றான். 76. எனவே, அவ்வளவுதான். அது இன்னமும் இழுத்துக் கொண்டிருப்பதையும், தேவன் நம்முடைய இருதயங்களோடு இடைபடுவதையும் நம்மால் உணர முடிந்தால், அப்பொழுது நம்முடைய நங்கூரம் இன்னமும் பற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். 77. மின்னலை, மின்சாரத்தை உபயோகப்படுத்திய பெஞ்சமின் பிராங்க்ளின் தான் அந்த புட்டியில் மின்னலைப் பிடித்தார் என்று நான் நினைக்கிறேன். அவருக்குள் இருந்த ஏதோ ஒன்று அழைத்தது, "அதில் வல்லமை உள்ளது. அந்த வல்லமையை உபயோகிக்க முடியும்" என்றது. அது சக்தி வாய்ந்ததாக இருந்தால், தெருக்களில் சுடுவதற்கும், மரக்கட்டைகளை வெடிக்கச் செய்யவும், நிலத்தை பிளக்கவும், அது ஒருமுறை சேணம் கட்டப்பட்டிருந்தால், அதனால் என்ன செய்ய முடியும்? அது வெளிச்சத்தையும், பிரகாசத்தையும் அளித்து, முழு பூமியையும் தாக்கும். பெஞ்சமின் ஃபிராங்க்ளின், தன்னுடைய காத்தாடியின் மேல் மீன்பிடித்துக் கொண்டிருந்தார் என்று நான் நினைக்கிறேன், அதன் வால் நுனியில் ஒரு திறவுகோல் கட்டப்பட்டு, கீழே ஒரு புட்டியை வைத்திருந்தார். அவர் அதைப் பெற்றுக்கொண்டபோது, அவர் என்ன வைத்திருந்தார் என்று அவருக்குத் தெரியவில்லை, ஆனால் அவர், "நான் அதைப் பெற்றுக்கொண்டேன்! நான் அதைப் பெற்றுக் கொண்டேன்!" என்று கூச்சலிடத் தொடங்கினார். அது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை; அவர் அதனோடு என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் அறியாதிருந்தார்; ஆனால் அவருக்கு ஏதோ ஒன்று இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அந்தவிதமாகத்தான் ஒவ்வொரு மனிதனும் தன்னுடையதை உடையவனாக இருக்கிறான்; நம்பிக்கைகள் எந்த ஒன்றின் பேரிலும் கட்டியெழுப்பப்படவில்லை நீதியோடு கூடிய இயேசுவின் இரத்தத்தைப் பார்க்கிலும் வேறொன் றிலும் அல்ல; என் ஆத்துமாவைச் சுற்றிலுமுள்ள யாவும் வழி விடுகின்றன, அப்படியானால் அவரே என்னுடைய முழு நம்பிக்கையும், தங்குதலுமா யிருக்கிறார். திடமான கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் நான் நிற்கிறேன்; மற்றெல்லா நிலங்களுமே அமிழ்ந்து கொண்டிருக்கும் மணலாகவே உள்ளது. 78. மீண்டும் ஒருமுறை பிறக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் இருதயத்திற்குள் அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறார். சில வாலிபர்கள் கல்வியறிவற்றவர்களாகவோ அல்லது வாலிபராகவோ அல்லது படிப்பறியாதவர்களாகவோ இருக்கலாம், அது எப்படியிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை; எவருமே அதை விளக்கிக் கூற முடியாது, எனவே நீங்கள் கல்வியறிவற்றவர் என்ற காரணத்தால் வருத்தப்பட வேண்டாம். உங்களால் அதை விளக்க முடியாது. எவ்வளவு புத்திசாலியாயிருந்தாலும் அல்லது எவ்வளவு அறிவாளியாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அதை விளக்க ஒரு மனிதனும் இதுவரை இருந்ததில்லை. அது தேவனுடைய சொந்த இரகசியமாயுள்ளது. ஆனால் அந்த வார்த்தை உங்களுடைய இருதயத்தில் ஜீவனை எடுக்கும்போது, நீங்கள் அதைக் கண்டு, நீங்கள், "நான் அதைப் பெற்றுக் கொண்டேன்!" என்று கூச்சலிடுகிறீர்கள். நீங்கள் அதைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது; அது உங்களோடு என்ன செய்யப் போகிறது என்பதை நீங்கள் அறியீர்கள்; ஆனால் ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள். 79. இப்பொழுது, ஆகையால், வார்த்தையின் பேரில்! அது அழகாக இருக்கிறது. இப்போது நாம் இன்று காலை எதிர்கொண்டு, பரிசீலனையில் உள்ளோம். என்னுடைய கருத்துப்படி, பழைய ஏற்பாட்டின் மிக முக்கியமான நூல்களில் ஒன்று. யோசேப்பு (நாம் பேசப் போகிறோம்) தன்னுடைய சகோதரர்களை சந்திப்பது. பரிசுத்த ஆவியானவர் இதற்குள் நுழைந்து அதை நம்முடைய இருதயங்களுக்கும் சிந்தைக்கும் வெளிப்படுத்துகிற நூறு வித்தியாசமான வழிகள் இருக்கக்கூடும். எனவே, இதை சிந்தித்துப் பார்க்கையில், இங்கே ஒரு சில நாட்களாக இருப்பதால், இந்தக் காலையில் நாம் சிறிது நேரம் பேசலாம், ஏனென்றால் தொண்டையில் ஒரு இறுக்கம் இருப்பதனால், அதன்பின்னர் இன்றிரவு அது மீண்டும் எடுக்கப்படலாம் போதகருக்கு தன்னுடைய இருதயத்தில் எந்தக் காரியமும் இல்லையென்றால், ஒருக்கால் அதை தொடர்ந்து செய்து திங்கட்கிழமை இரவு அதை முடித்துவிடலாம், அப்படியானால் அவ்விதமாகவே தேவன் அதை அருளுகிறார். 80. இப்பொழுது, நாம் பழைய ஏற்பாட்டின் விசேஷ குணாதிசயங்களை நன்கு அறிந்திருக்கிறோம், எப்படியாய், "பண்டைய காரியங்கள் யாவும் ஒரு நிழலாயிருந்தது," எபிரெயர் 11, "வரப்போகிற காரியங்களின் நிழலாயிருந்தது." அது எவ்வளவு அழகாக இருக்கிறது, எவ்வளவு தேவன் முன் நிழலிடுகிறார்! 81. நாம் இந்த நிழலை அது இருந்தவிதமாக உணரும்போது, இங்கே அப்பால் ஏதோ ஒன்று உள்ளது என்பதை நாம் அறிகிறோம். தேவன், தம்முடைய சர்வ வல்லமையினால், தம்முடைய மகத்தான முடிவற்ற சிந்தையில், ஏதோ ஒன்று சம்பவிக்க ஆயத்தமாயிருப்பதைக் காண்கிறபடியால், அவரால் அதை முன்கூட்டியே எச்சரிக்க முடியும். அவரால் ஒவ்வொரு காரியத்தையும் ஒருங்கே கிரியை செய்ய முடியும், மனிதனின் கோபத்தையும் கூட, உங்களை பொல்லாங்காய் நடத்தும் ஒருவரைக் கூட, அவரைத் துதிக்கச் செய்ய முடியும்,. சிறிது நேரம் கழித்து, கர்த்தருக்குச் சித்தமானால், அந்த யோசேப்பின் சகோதரன் அவனை எப்படி தீமையாக நடத்தினான் என்பதை நாம் பார்க்கப்போகிறோம். அவர் அதைத் திருப்பி, அவரைத் துதிக்கும்படி செய்தார். எனவே, நாம் கவலைப்பட வேண்டிய எந்த ஒரு காரியமும் இல்லை, ஒரு காரியமும் இல்லை. 82. எப்படியாய் அந்த தேவன், அந்தப் பையன் மூலமாக, கர்த்தராகிய இயேசுவின் வருகையை முதல் முறையாக முன்னடையாளமாகக் காண்பித்து, கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் முறை வருகையிலும், என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைக் குறித்து ஒன்றுமே அறியாத ஒரு ஜீவியத்தில் அவை யாவற்றையும் கிரியை செய்தார். ஆமென். பரிதாபமான சிறுவன் யோசேப்பை காண்பது உங்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்யவில்லையா? ஏன், என்ன சம்பவித்துக் கொண்டிருந்தது என்றும், ஏன் இந்தக் காரியங்கள் யாவும் சம்பவிக்க வேண்டும் என்றும் அவன் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவை யாவும் தேவனால் கிரியை செய்து, முன்னறிவித்து, இருக்கப்போகும் காரியங்களை முன்னடையாளமாயிருந்தன. 83. அப்படியானால் நீங்கள் வார்த்தையை கவனிக்க முடியும், அதை நீங்கள் இங்கே எடுத்து அதை எப்படி என்று ஆதியாகமத்தில் வாசித்துப் பாருங்கள், அதை புத்தகத்தின் நடுவில் வாசித்துப் பாருங்கள், புஸ்தகத்தின் கடைசி பாகத்தில் அதை வாசித்துப் பாருங்கள், ஒவ்வொரு வார்த்தையும் இந்தவிதமாக ஒன்றோடொன்று ஒத்துப் போகிறது. அது ஆயிரக்கணக்கான வருட இடைவெளியில் நூற்றுக்கணக்கான வித்தியாசமான மனிதர்களால் எழுதப்பட்டது. புரிகிறதா? ஆகையால், அவையாவும் தேவன் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஒருவர் மற்றொன்றை அறியாமலும், அல்லது என்ன புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்பதை அறியாமலும், அதைக் குறித்து ஒன்றுமேயில்லாமல்; மற்றொரு நேரத்தில், மற்றொரு காலத்தில் இருந்தனர். 84. இன்றைக்கு, தேவன் அங்கே முன்பு செய்தது போலவே சரியாக இடைபடுகிறார் என்பதை, நம்மால் காண முடிகிறது. நாம் இப்பொழுதுதான், பழைய ஆண்டின் நிழலிலிருந்து, புத்தாண்டில் முடிக்கப் போகிறோம். ஆதியிலே அது எப்படி, எப்படி அந்த தேவன், பாவம் பூமியின் மேலும் ஜனங்கள் மேலும் ஆதிக்கம் செலுத்தப் போவதை அவர் கண்டபோது, எப்படியாய் அந்த பெரிய திட்டம் தாறுமாறாக்கப்பட்டு; அது கெட்டுப்போகாமல், மறுபடியும் சிருஷ்டிக்கப்படாமல், தாறுமாறாக்கப்பட்டதாயிருக்கிறது. 85. பாருங்கள், சாத்தானால் சிருஷ்டிக்க முடியாது. அவனால் தாறுமாறாக்கத்தான் முடியும். நீங்கள் காண்கிற ஒவ்வொரு காரியமும் தவறானதாயிருக்கிறது, அது தாறுமாறாக்கப்பட்ட நீதியாயிருக்கிறது. புரிகிறதா? நீங்கள் தெருவில் ஒரு வயதான குறிசொல்பவரைக் காண்பீர்கள், அது ஒரு தாறுமாறாக்கப்பட்ட தீர்க்கதரிசிகள். பார்த்தீர்களா? பொல்லாங்கான எந்தக் காரியத்தையும் நீங்கள் காண்கிறீர்கள், புருஷன் தன் மனைவிக்கு அளித்த வாக்குத்தத்தங்களின்படி உண்மையில்லாமல் ஜீவிக்கிறதைக் பாருங்கள், அது நீதியை தாறுமாறாக்கி தீமையாக மாற்றுகிறது. இதற்கு நேர்மாறாக, தெருவில் உள்ள ஸ்திரீகள், அவர்கள் செய்கிறவிதமாக செயல்படுவதையும், அவர்கள் இருக்கும் விதமாகவே மாறுவதையும் காண்கிறீர்கள், அதுவே தாறுமாறாக்கப்பட்ட பெண்மணிகள். 86. அன்றொரு நாள் நானும் மனைவியும் லூயிவில்லைக் கடந்து சென்றோம், நாங்கள் சாப்பிட்டு வந்து கொண்டிருந்த ஐந்தாவது தெருவில் அங்கே, நான் ஒரு ஜன்னலில் ஒரு அடையாளத்தைக் கண்டேன். மேலும், "பெண்களுக்கான மேஜைகள்" என்று எழுதப்பட்டிருந்தது. 87. அதற்கு நான், "அவர்களுக்கு ஒருபோதும் வாடிக்கையாளரே கிடையாது" என்றேன். இல்லை, ஒரு பெண்மணியும் அங்கு செல்லமாட்டாள். அவள் அங்கு செல்லும்போது, அவள் இனிமேல் ஒரு பெண்மணி அல்ல. புரிகிறதா? எனவே, அந்த அடையாளத்தின் கீழ், அவர்களுக்கு ஒரு வாடிக்கையாளரே கிடையாது. பெண்மணிகள் அந்த இடங்களுக்கு செல்வதில்லை. ஆனால், நீங்கள் பாருங்கள், அங்கே என்ன நடக்கிறது என்பது, தாறுமாறாக்கப்பட்ட பெண்கள். புரிகிறதா? சரி. இப்பொழுது, தேவனே, எல்லாக் காரியங்களும் அவரைத் துதிக்கச் செய்தாரே! 88. நாம் கிறிஸ்துமஸை, கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அது, அது சரியாக அவருடைய பிறந்த நாள் அல்ல. அவருடைய பிறந்த நாள் ஏப்ரல் மாதத்தில் இருந்தது. காரணம், யூதேயாவில் இங்கே இருப்பதைக் காட்டிலும், அல்லது டிசம்பர் மாதத்தில் குளிராக இருக்கிறது. எனவே, நாம் அதை உணருகிறோம். நீங்கள் அன்றொரு நாள் அந்த புகைப்படத்தில் பார்த்தீர்கள், அங்கே பனியில் தொட்டிகள், அதைப் போன்ற காரியங்கள், யூதேயாவில் இருந்தன. அந்தவிதமான வானிலையில் மேய்ப்பர்கள் ஒரு மலையின் மேல் படுத்துக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆனால் அது அந்த நாளல்ல. ஆனால் அந்த நாள் என்பது, அவ்வளவாக பொருள்படுகிறதில்லை. அது-அந்த நாளைக் குறித்து நாம் கொண்டுள்ள மனப்பான்மையே வித்தியாசமாக தென்படுகிறது. 89. இப்பொழுது கவனியுங்கள். தேவன் ஸ்திரீயின் வித்தையும், அவர்கள் அங்கே எப்படி தவறாக அர்த்தங்கொண்டிருந்தனர் என்றும், நீதி தாறுமாறாக்கப்பட்டிருந்தது என்றும் கண்டவுடனே, அந்த ஸ்திரீயினூடாக ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வித்து வரும் என்று தேவன் ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். உங்களுக்கு அது புரிகிறதா? ஒரு வித்து இருக்கும். 90. அங்கே நின்று கொண்டிருந்த சாத்தான் அதைக் கேட்டவுடனே, அவன் அதைக் கேட்டவுடனே, அந்த வித்தை அழிக்க அவன் தீர்மானித்தான். அவன் அதை யோசேப்பில் செய்ய முயற்சித்தான். அவன் காலங்கள் தோறும் முயற்சித்தான். அவன் இன்னமும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட வித்திற்கு எதிராக இருக்கிறான். ஆமென். 91. இப்பொழுது ஒரு நிமிடம், நீங்கள் உங்களுடைய ஆழ்ந்த சிந்தனை கொண்டு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இரட்சிப்பின் தலைச்சீரா தரித்துக்கொள்ளுங்கள், இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இங்கே உண்மையாகவே முக்கியமான ஒன்று உள்ளது. நீங்கள் அதனுடன் இணங்காமல் இருக்கலாம்; அது சரிதான். ஆனால், நீங்கள் கவனித்தீர்களா, உடனே... 92. ஏவாள் ஏற்கனவே அநீதியுள்ளவளாய் வாழ்ந்து, பாவம் செய்திருந்தபடியால், ஏற்கனவே ஒரு கருத்தரித்தல் உண்டாயிருந்தது. அது எங்கிருந்து வந்தது? அது ஆதியாகமத்தில் உள்ளது. இன்றைக்கு மனிதர்கள் மிருகத்திற்கும் மனிதனுக்குமிடையே உள்ள விடுபட்ட தொடர்பைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வெளிப்பாடு. வேதம், "சர்ப்பம் அந்த ஸ்திரீயை வஞ்சித்தது" என்று கூறியுள்ளது. 93. இன்றைக்கு, மனிதனால் மிருக ஜீவன்களை வளர்க்க முடிகிறது, மனித இனத்திற்கு மிக நெருக்கமான மிருகம் ஒத்த வால் இல்லா மனித குரங்கு. அவர்கள் அதனை ஒரு குழாயைப் புகைக்கச் செய்யலாம், ஒரு மிதிவண்டியில் சவாரி செய்யச் செய்யலாம், ஒரு தொப்பியை அணிந்து, அதைக் கொண்டு வணக்கம் தெரிவிக்கச் செய்யலாம். அது ஒரு குதிரைக்கு "கீ" மற்றும் "ஹா" என்பது போன்றது. அது ஒலி. அதற்கு ஆத்துமா கிடையாது. அவனால் சிந்திக்க முடியாது. அது சத்தத்தினால் மாத்திரமே செல்ல முடியும். அதற்க்கு ஆத்துமா என்ற ஒன்று கிடையாது. அதன்பின்னர் அவர்கள் இங்கே இடையில், ஒரு விடுபட்ட இணைப்பைப் பெற்றுள்ளனர், அதை அவர்களால் ஒருபோதும் கண்டறிய முடியவில்லை. ஆறாயிரம் ஆண்டு ஒரு வால் இல்லா மனித குரங்கிலிருந்து ஒரு முறையாவது முணுமுணுக்க அவர்களால் முயற்சித்தும், அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஆனால், நாம் மிருக ஜீவன் என்பதை நாம் அறிவோம். நாம் பூமியிலிருந்து வந்த தாவர ஜீவன்கள். 94. நான் அன்றொரு நாள் நம்முடைய அருமையான சகோதரியின் அடக்க ஆராதனையில் கூறிக்கொண்டிருந்துபோல. நாம் பூமியின் பதினாறு மூலக் கூறுகளைக் கொண்ட ஒரு கூட்டமாக இருக்கிறோம், இயலுலக அண்டத்துக்குரிய ஒளி, பெட்ரோலியம், மற்ற காரியங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. நம்முடைய சரீரங்கள், "உண்டாகக்கடவது" என்று தேவன் உரைத்தபோது, நாம் இங்கே இருந்தோம். ஆனால், ஏதோ ஒன்று, ஒரு தலைசிறந்த சிந்தை இப்பொழுது நாம் என்னவாயிருக்கிறோம் என்பதற்குள் நம்மை வளர்த்தெடுத்தது. நம்மை அழிப்பதற்காக அல்ல, ஆனால் நாம் என்றென்றைக்குமாய் ஜீவிக்கும்படியாக, கரங்களினாலும், ஆயுதங்களினாலும் நம்மை உண்டாக்கினார். பாவம் அழிவை செய்தது. நம்மை உண்டாக்கின அவரே, நாம் இங்கிருப்பதைக் குறித்த எந்த-எந்த எண்ணமும் இல்லாமல், நம்மை உண்டாக்கி, இந்தக் காரியங்களை ஒன்றாகக் கொண்டு வந்து, நாம் இப்பொழுது இருக்கிற விதமாக நம்மை உண்டாக்கினவரே; அதை ஏற்றுக் கொள்ள நமக்கு சுயாதீன உரிமை அவர் அளித்து, நம்மை சிருஷ்டித்த அதே வார்த்தையினால், அவர் நம்மை மீண்டும் எழுப்புவார் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இந்த பெட்ரோலியம், அணுக்கள் போன்றவை தேவனுடைய வார்த்தையினால் எவ்வளவு அதிகமாக ஒன்று சேரும்! 95. இப்பொழுது, ஆதியிலே, தேவன் பேசினபோது, சாத்தான் அங்கே நின்று கொண்டிருந்தான். அவன் அதைக் கேட்டான். 96. ஜனங்கள் இந்த விடுபட்ட இணைப்பைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், வெளிப்பாட்டின் மூலம் நான் உங்களுக்குச் சொல்லுவேன். மிருகத்திற்கும் மனிதனுக்குமிடையே காணாமற்போன அந்த நபர் சர்ப்பமாயிருக்கிறது, அவனுடைய கால்கள் அவனிடத்திலிருந்து எடுக்கப்படுவதற்கு முன்பே. வேதம், "அது எல்லா மிருகங்களிலும் தந்திரமுள்ளதாயிருந்தது" என்று கூறியுள்ளது. அது ஊர்வன அல்ல, "சகல காட்டு ஜீவன்களிலும் மிகவும் தந்திரமுள்ளதாயிருந்தது" என்று கூறியுள்ளது. அவனே தன்னுடைய அழகில் அந்த ஸ்திரீயை வஞ்சித்த ஒருவனாய் இருந்தான், அவள் கர்ப்பவதியானாள். இப்பொழுது, அதைச் செய்வதால், பாவம் வருவதைக் கண்டு, இந்த சர்ப்பத்திற்கும் இடையே எந்தத் தொடர்பையும் விஞ்ஞானம் கண்டுபிடிக்காத அளவிற்கு தேவன் இப்படி ஒரு சாபத்தை அதன் மீது வைத்தார், மனிதவர்க்கமும் இன்றைக்கு அறியப்படுகிறது. ஆனால் நீங்கள் விழுந்துபோன, தாழ்த்தப்பட்ட ஜீவியங்களுக்கிடையில், அந்த மிருக ஜீவனை ஒன்றாக இணைத்துள்ளது. அங்குதான் காரியம். 97. "தேவன் அதை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, கற்றுக் கொள்ளுகிற பாலகருக்கு அதை வெளிப்படுத்துவார்." புரிகிறதா? 98. அங்குதான் உங்களுடைய விழுந்துபோன நபர், சர்ப்பம் உள்ளது. அவன் வழியிலிருந்து கொண்டு வரப்பட்டான்...மிகவும் நுட்பமான, மகத்தான, மிக அழகான, அதிக மானிட இனத்தை ஒத்திருந்தான். அதன்பின்னர் அவன் ஏவாளோடு செய்த இந்த பொல்லாங்கின் நிமித்தமாக, அவர் அவனை ஒரு ஊர்வனவாக கொண்டு வந்தார், "அது தன்னுடைய வயிற்றினால் நகர்ந்து உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்ன வேண்டும்' அங்கேதான் விஞ்ஞானம் அங்கு வரமுடிகிறது, அவர்களுடைய மரமானது கீழே இடித்து தள்ளப்படுகிறது. 99. கவனியுங்கள், இப்போது, அந்த ஸ்திரீ கண்டவுடனே...அவள்... இப்பொழுது, அவள் வஞ்சிக்கப்பட்டாள். அவள் பாவத்தைக் கொண்டு வரவில்லை. அவள் வஞ்சிக்கப்பட்டாள். அது சரியென்று அவள் எண்ணினாள். ஆனால், "ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை" என்று வேதம் கூறியுள்ளது. அது தவறாயிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான், அந்த மிருகம் செய்திருந்த அதேக் காரியத்தை அவள் அவனையும் செய்யச் செய்தாள். 100. அவள் தன்னுடைய முதல் குமாரனைப் பெற்றெடுத்தாள், அது, அந்த பையனுக்குள் பிசாசின் எல்லா குணாதிசயங்களும் இருந்தன. அவன் ஒரு கொலைகாரனாயிருந்தான். அவன் பொறாமை கொண்டான். அது எப்படி அந்த தூய தேவனுடைய ஓடையிலிருந்து வர முடியும்? அது பொல்லாங்கிலிருந்து வர வேண்டியதாயிருந்தது. அவன் இதைச் செய்தவுடனே, அவன், பிசாசு, அவனுடைய கருவியைப் பயன்படுத்தினான். 101. அவள் ஆதாமுக்குப் பிறகு, ஆபேலுக்குப் பிறகு, அவளுடைய இரண்டாம் குமாரனைப் பெற்றெடுத்தாள். உடனே, பிசாசு அந்த நீதியான வித்தை அழிக்க முயன்றான். அவன் திரும்பி ஆபேலைக் கொன்றான். அது யூதாஸுக்கும் இயேசுவுக்கும் ஒரு மாதிரியாயிருக்கிறது. பலிபீடத்தண்டையிலே அவனைக் கொன்று- கொன்றுபோட்டான்; அங்கே, இயேசுவை, யூதாஸ் இயேசுவைக் கொன்றான், அவரை முப்பது வெள்ளிக் காசுகளுக்காகக் காட்டிக் கொடுத்து, அவரை விற்றுப்போட்டான். சரி. 102. ஆனால், கவனியுங்கள். அவன் அதைச் செய்தபோது, அப்பொழுது தேவன், கிறிஸ்துவின் ஒரு மாதிரியாய், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் இரண்டிலுமே, அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள அவர் சேத்தை எழுப்பினார். புரிகிறதா? பிசாசு சேத்தைப் பின்தொடர்ந்தான். 103. இப்பொழுது கவனியுங்கள். ஜலப்பிரளய அழிவிற்கு முன்னர், நோத் தேசத்திலிருந்து காயீனின் புத்திரர் வழியாய் வந்த ஒரு நீண்ட வம்ச புருஷர், அவர்கள் விஞ்ஞானிகளாயும், புத்திசாலிகளாயும், அறிவாளிகளாயும், அற்புதமான மனிதர்களாயும் இருந்தனர். அவர்கள் உலோகங்களையும் கூட பதப்படுத்தினர். அவர்கள் வீடுகளைக் கட்டினர். அவர்கள் ஒரு அற்புதமான நாகரீகமாக இருந்தனர். அவர்கள் எப்படி வெண்கலத்தைக் கொண்டு வேலை செய்தனர் என்றும், அவர்கள் எப்படி உலோகத்தைக் கொண்டு வேலை செய்தனர் என்றும் வேதம் தொடர்ந்து கூறுகிறது. ஆனால் இந்த மற்ற குழுவினரோ அலைந்து திரிபவர்களாக இருந்தனர். 104. ஆனால் இரு கூட்டத்தாரும் மதசம்பந்தமானவர்கள். காயீன் பக்தியுள்ளவனாயிருந்தான். ஆபேல் பக்தியுள்ளவனாயிருந்தான். தேவன் ஒரு கோட்டை வரைந்தார், அது சரியானதாயிருந்தது. காயீன் ஆபேலைப் போலவே பக்தியுள்ளவனாயிருந்தான். அவர்கள் இருவரும் பலிபீடங்களைக் கட்டினார்கள். அவர்கள் இருவரும் தேவனை விசுவாசித்தனர். அவர்கள் இருவரும் தேவனை தொழுது கொண்டனர். அவர்கள் இருவரும் காணிக்கைகளைக் கொண்டு வந்தனர். 105. இப்பொழுது அந்த இரண்டு வித்துக்களைக் கவனியுங்கள். ஒன்று, சண்டையிடுதல்; நீதியுள்ள வித்தை அழிக்க முயற்சிக்கும் பொல்லாங்கானவர்கள். அவன் ஆபேலை அழிக்க முயன்றான்; அவன் செய்தான், ஆனால் தேவனோ அவனுடைய ஸ்தானத்தில் சேத்தை எழுப்பினார். அவர் அங்கே இயேசுவை உடையவனாயிருந்தார் என்று அவர் எண்ணினான். காலங்கள் தோறும், எங்கும் நோக்கிப் பாருங்கள். அவர், அவன் வந்த ஒவ்வொரு இடத்திலும், அவன் அந்த வித்தை மூலையில் வைத்தார். அவன் ஒருவரை, அல்லது மற்றவரைக் கொன்றபோது, அவன் அதை உடையவனாயிருந்ததாக எண்ணினான். இறுதியாக அவன்-அவன் யோவான் ஸ்நானனைப் பின்தொடர்ந்து, முடிவில் அவனுடைய தலையை வெட்டினான். அப்பொழுது அவன் அவரை உடையவனாயிருந்தான் என்று அவன் எண்ணியிருந்தான், ஆனால் அவர் இங்கே இயேசுவுக்குள் இருப்பதை அவன் கண்டறிந்தான். அவன் எல்லா குழந்தைகளையும் கொன்று போட்டான். மோசே; அவன் மோசேயைக் கொல்ல முயற்சித்தான். அவன் அந்த வித்தை அழிக்க தன்னால் முடிந்த ஒவ்வொரு வழியிலும் முயன்றான், அவன் கிறிஸ்துவை கல்வாரியில் கொன்றபோது; ஆனால் தேவன் மூன்றாம் நாளிலே அவரை மீண்டும் எழுப்பினார். அதன்பின்னர் தேவனிடத்திற்கு குமாரரையும் குமாரத்திகளையும் அழைக்க பரிசுத்த ஆவியை அவர் திரும்ப அனுப்பினார். அதே பொல்லாத, மதசம்பந்தமான வித்து அந்த நீதியான வித்தை இன்றைக்கும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதைக் காண்கிறீர்களா? அவர்கள் அந்த நீதியுள்ள தேவனுடைய கிளையை அழிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 106. இப்பொழுது, இருபுறமும், நீங்கள் கவனிப்பீர்களேயானால், அது ஆதியாகமத்தில் துவங்கினது, இருபக்கமும் மதசம்பந்த மானதாயிருந்தது. அவர்களில் ஒருவன், ஸ்தாபனத்தைச் சார்ந்தவன், இறுமாப்புக் கொண்டவன். மற்றொருவன் வெளிப்பாட்டினால் தாழ்மையாய் ஆவியில் நடப்பவன். 107. அது வயலின் கனிகளுக்குப் பதிலாக ஆட்டுக்குட்டி என்பதை ஆபேல் எப்படி அறிந்து கொள்ள முடிந்தது? ஏனென்றால் அது ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. 108. பேதுரு அவரை தேவனுடைய குமாரன் என்று அறிக்கை செய்தபோது, இயேசுவும் அதையேக் கூறினார். அவர், "மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கன்மலையின்மேல்..." என்றார். கன்மலை, பேதுரு அல்ல, இயேசு அல்ல, ஆனால் தெய்வீக வெளிப்பாட்டின் பேரில். "என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." உங்களுக்கு அது புரிகிறதா? அது தெய்வீக வெளிப்பாடாய் உள்ளது. 109. இப்பொழுது கவனியுங்கள். ஒவ்வொரு முயற்சியும், காலந்தோறும், அவர்கள் நேருக்கு நேர் சந்தித்து, அதை எதிர்த்துப் போராடினர். மோவாப் மலையின் மேல் இருந்ததையும், இஸ்ரவேல் பள்ளத்தாக்கில் இருந்ததையும் பாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு சகோதரன் என்ற முறையில், பெருந்தன்மையுள்ளவர்களாய், தங்களுடைய தேசத்தினூடாக கடந்து செல்லும்படி, தேவன் அவர்களுக்கு வாக்குத் தத்தம் செய்திருந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருந்தனர்; அவர்களுடைய சபையில் ஒரு சிறு எழுப்புதல் மாத்திரமே கேட்கப்பட்டது. தேசத்தினூடாக கடந்து செல்ல, கால்நடைகள் நக்கும் புல்லுக்கு கூட அவர்கள் கூலி கொடுப்பதாக வாக்களித்தனர். அவர்கள் இராஜாவினுடைய பெரும்பாதையினூடாக செல்வார்கள், அவர்கள் தேசங்களினூடாக கடந்து செல்லும்போது அவர்கள் செய்யும் காரியங்களை, அவர்கள் அதை சரிப் படுத்துவார்கள். ஆனால் பொறாமை... 110. இப்பொழுது, மோவாப், மோவாப் தேசம் விசுவாசமற்றதாயிருக் கவில்லை. அவர்கள் லோத்தின் குமாரத்திகளின் புத்திரராயிருந்த படியால், இஸ்ரவேலர் விசுவாசித்த அதே தேவனில் விசுவாசங் கொண்டிருந்தனர். லோத்து குடிவெறி கொண்டிருந்தபோது, லோத்தின் குமாரத்தி தன்னுடைய சொந்த தகப்பனாரால் கர்ப்பவதியானாள். அவர்கள் அங்கு சென்றனர், அவர்கள்...அங்கிருந்துதான் இந்த மோவாபியர்கள் தோன்றினர். 111. அவர்களுடைய தீர்க்கதரிசி வெளியே வந்தபோது, அவர்களுடைய போதகர் பண வெறிகொண்டவனாய், ஏழு பலிபீடங்களையும், அதே அளவு பீடங்கள் இங்கும் தேவைப்பட்டன. இதோ இங்கே மோவாப் உட்கார்ந்து கொண்டிருக்கிறது, அந்த மகத்தான அருமையான ஸ்தாபன தேசம், யாவும் பொருத்தப்பட்டு, உருவம் கொண்டதாக உள்ளது. 112. இங்கே இஸ்ரவேலர் ஒரு சிறிய வயோதிக பரிசுத்த உருளையாக கூடாரங்களில் இடம் விட்டு இடம் அலைந்து திரிந்தனர். நீங்கள், "பரிசுத்த உருளை" என்று கூறுகிறீர்களா? இன்றைக்கு அவர்கள்- அவர்கள் பரிசுத்த உருளையர் என்று அழைக்கப்படுவார்களானால், அவர்கள் நிச்சயமாகவே. 113. அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தபோது, தேவன் அவர்களுக்கு முன்பாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார், மிரியாம் தம்ளூவை எடுத்துக்கொண்டு, தம்புருவை அடித்து, கரையில் ஓட ஆரம்பித்தாள், கூச்சலிட்டு, குதித்து, ஆவியில் நடனமாடினாள். இஸ்ரவேல் குமாரத்திகள் அவளைப் பின்தொடர்ந்து, குதித்து, கூச்சலிட்டு, ஆவியில் நடனமாடினர். மோசே தன்னுடைய கரங்களை உயர்த்தியவனாக நின்று, ஒருக்கால் இதற்கு முன்பு யாரும் கேட்டிராத பாஷையில் பாடினான், எவருமே புரிந்து கொள்ள முடியாத ஒரு பாடல். அவன் ஆவியில் கர்த்தருக்குப் பாடினான். அது நவீன பரிசுத்த உருளைகள் இல்லையென்றால், அவர்களை எங்கே தேடுவது என்று எனக்குத் தெரியாது. அவர்களோட அடையாளங்களும் அற்புதங்களும் இருந்தன. 114. இப்பொழுது, தேவன் அடிப்படையை மாத்திரமே மதிக்கிறா ரானால், இங்கே நோக்கிப் பாருங்கள். மோவாப், வேதப்பிரகாரமாக கூறினால், இஸ்ரவேலரைப் போன்றே அடிப்படையானதாயிருந்தது. இஸ்ரவேலர் பெற்றிருந்த எல்லாவற்றையும் அவன் உடையவனாயிருந்தான். அவனுக்கு ஏழு பலிபீடங்கள் இருந்தன. அதுதான் தேவன் தேவையாயிருந்தது. இஸ்ரவேலர் ஏழு பலிபீடங்களை உடையவர்களாயிருந்தனர். அவன் ஏழு சுத்தமான பலிகளை உடையவராயிருந்தான். இஸ்ரவேலர் ஏழு சுத்தமான பலிகளை உடையவர்களாயிருந்தனர். மீண்டும், காயீனும் ஆபேலும் உண்டு. பார்த்தீர்களா? சரி. அவன் ஏழு காளைகளைப் பலியிட்டான். அவன் ஏழு காளைகளைப் பலியிட்டான். அவன் ஏழு ஆட்டுக்கடாக்களைப் பலியிட்டு, அறிகுறித்து பேசி...கிறிஸ்து வருவார் என்று விசுவாசித்தான். அவன் ஏழு ஆட்டுக்கடாக்களை, அதேக் காரியத்தையே பலியிட்டான். அடிப்படையானது எவ்வளவு அடிப்படையானதாயிருக்க முடியுமோ அவ்வளவு அடிப்படையானது! 115. காயீன் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; ஆபேல் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். காயீன் ஒரு பலி செலுத்தினான்; ஆபேல் ஒரு பலி செலுத்தினான். ஆபேல் தொழுதுகொண்டான்; காயீன் தொழுது கொண்டான். ஆனால், ஆபேல் அவருடைய தெரிந்து கொள்ளுதலா யிருந்தான் என்பதை தேவன் ரூபகாரப்படுத்தி, நிரூபித்தார். 116. இஸ்ரவேல் தம்முடைய தெரிந்துகொள்ளுதல் என்பதை தேவன் இங்கே நிரூபித்தார், ஏனென்றால் இஸ்ரவேல் தங்களுடைய முகாமில் இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றை உடையவர்களாயிருந்தனர். அவர்களுடைய எல்லா தவறுகளோடும், அவர்கள் ஒரு அக்கினி ஸ்தம்பத்தை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் தெய்வீக சுகமளித்தலுக்கான பாவநிவிர்த்தியை உடையவர்களாயிருந்து, தெய்வீக சுகமளித்தலை பயிற்சி செய்தனர்; ஒரு சர்ப்பம். அவர்கள் ஒரு அடிக்கப்பட்ட கன்மலையை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் முகாமில் அற்புதங்களையும் அடையாளங்களையும் உடையவர்களா யிருந்தனர். 117. யோவான் வந்தபோது, அவன் இயற்கைக்கு மேம்பட்டவ னாயிருந்தான். இயேசு வந்தபோது, அது இயற்கைக்கு மேம்பட்டதாயிருந்தது. சத்துரு, அடிப்படை பக்கத்தில், எப்பொழுதுமே இயற்கைக்கு மேம்பட்டவர்களை துன்புறுத்தினான். 118. இன்றைக்கு அவன் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக் கிறான் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? அதே காரியம், "தெய்வீக சுகமளித்தலைக் அழித்துப் போடு! இந்த ஜனங்களை அழித்துப் போடுங்கள்! அவர்களுக்கு ஒன்றுமேயில்லை!" என்றனர். கௌரவமானவர்கள், மகத்தான ஜனங்கள்! "அவைகளை அழித்துப்போடுங்கள்!" சகோதரனே, அது அந்த திராட்சைச் செடியைத் தவிர, ஆதியாகமத்தினூடாக சுற்றித் திரிந்து, வெளிப்படுத்தின விசேஷத்திற்குள்ளாக வருகிறது. 119. நான் உருளும் பரிசுத்தர்களின் பட்சத்தில் இருக்கிறேன்!...?... எதுவாக இருந்தாலும் இருக்கட்டும்...நான் ஒரு உருளும் பரிசுத்தரை பார்த்ததில்லை. அது தேவனுடைய சபையைச் சார்ந்ததாயிராத ஒரு நாமத்தை, பிசாசு அதற்கு சூட்டிக்கொள்கிறான். அவர்கள் பரிசுத்த உருளைகள் அல்ல. அவர்கள் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய், உலகத்தினால் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளனர். 120. இப்பொழுது, யோசேப்பு தன் தகப்பனிடமிருந்து பிறந்து தன் தகப்பனால் நேசிக்கப்பட்டு, தன் சகோதரரால் வெறுக்கப்பட்டான். இப்பொழுது கவனியுங்கள், கர்த்தராகிய இயேசுவின் பரிபூரண காட்சி. பழைய ஏற்பாட்டில், அவருடைய ஜீவியம் எப்படி மாதிரியாயிருந்தது என்பதை, நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அங்கே பின்னோக்கிப் பார்த்து, அந்தப் காட்சியைப் பாருங்கள்; அங்கே நிழல் உண்டு, அது என்ன நேர்மறை என்பதை நீங்கள் காண்கிறீர்கள். இப்பொழுது கவனியுங்கள், யோசேப்பு கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியாய், சபைக்கு ஒரு மாதிரியாய், பரிசுத்த ஆவியின் மாதிரியாயிருந்தான். மாதிரியாக... கிறிஸ்துவைப் போல, இன்றைக்கு சபையைப் போல, அவன் செழிப்பின் இளவரசனாக இருந்தான். 121. மீண்டும், கவனியுங்கள், அதாவது, அவன் பிறந்தபோது, அவனுடைய தகப்பன் அவனை நேசித்தான், அவன் இவனுக்கு பல வண்ணங்களைக் கொண்ட ஒரு மேலங்கியை உண்டாக்கினான். இப்பொழுது, எல்லா நிறங்களிலும் ஏழு பரிபூரண நிறங்கள் மாத்திரமே உள்ளன. மற்றவை யாவும் இந்த நிறங்களினால் உண்டாக்கப்பட்டவை. அந்த மேற்சட்டையில் ஒருக்கால் தகப்பன் உண்டாக்கின அங்கியில் ஏழு விதமான நிறங்கள், நிறங்களின் கோடுகள் இருந்திருக்கலாம். நீங்கள் கவனிப்பீர்களேயானால், அந்த நேரத்தில் யாக்கோபு அதை புரிந்து கொள்ளவில்லை, ஆனால் அது "வாக்குப்பண்ணப்பட்ட ஒருவரை" அடையாளப்படுத்தியது. தேவன் நோவாவிற்கு வானவில் அடையாளத்தை, ஏழு நிறங்களை அளித்தபோது, அது வாக்குத்தத்தமாக, இல்லை ஒரு உடன்படிக்கை ஒன்றாயிருந்தது. தேவன் உலகத்தை இனி ஒருபோதும் தண்ணீரினால் அழிக்கமாட்டார் என்று ஒரு உடன்படிக்கை செய்திருந்தார். 122. தேவனுடைய உடன்படிக்கை யாக்கோபின் மூலமாகவும், யோசேப்பிற்குள் கொண்டு செல்லப்பட்டது. ஆபிரகாம் தெரிந்துகொள்ளப்படுதலாய் இருந்தான், ஈசாக்கு நீதிமானாகுதலாய் இருந்தான், இஸ்ரவேல் கிருபையாயிருந்தான், யோசேப்பு பரிபூரணமாயிருந்தான். அந்த ஒன்று மாத்திரமே நிறங்களைக் கொண்டிருந்தது. 123. வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரத்தில், இயேசுவா னவரைச் சுற்றி வானவில்லும், வண்ணங்களோடும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பதை நாம் காண்கிறோம். அது ஜனங்களோடு தேவனுடைய உடன்படிக்கையாயிருந்தது. கிறிஸ்து... இதோ அது உள்ளது. ஓ, நீங்கள் அதை எவ்வளவாய்க் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! கிறிஸ்து தம்முடைய ஜனங்களோடு தேவனுடைய உடன்படிக்கையாயிருக்கிறார். ஸ்தாபனங்கள் அல்ல; ஆனால் கிறிஸ்து தேவனுடைய உடன்படிக்கையாயிருக்கிறார். 124. யோசேப்பு வெறுக்கப்பட்டது போல, கிறிஸ்துவும் இன்றைக்கு வெறுக்கப்படுகிறார். அவர்கள் கிறிஸ்துவை வெறுக்கிறார்கள் என்று கூற விரும்பவில்லை, ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்களுடைய கிரியைகளே நிரூபிக்கின்றன. அவர்கள் அவருடைய ஒவ்வொரு அசைவுக்கும் எதிராக இருக்கிறார்கள்; அவருடைய கிரியைகளைக் குறித்தும், அவருடைய கிரியைககள், அவருடைய அற்புதமான செய்கைகளைக் குறித்தும் பேசுகின்றனர். பாருங்கள், நிச்சயமாகவே, சாத்தானும் கூட, முகாமில் போராடிக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக. அவர்கள் சாத்தானின் வார்த்தைகளைச் சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் சாத்தான் குழப்பமுறச் செய்ய முயற்சிக்க என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவனுடைய வார்த்தை பரிபூரணமாய் நிற்கிறது, அவருடைய வாக்குத்தத்தம் பரிபூரணமாயிருக்கிறது. நான் ஒருபோதும் அந்தக் குழுவின் பக்கம் சாய்ந்து கொள்ள விரும்பமாட்டேன். 125. கவனியுங்கள், அங்கே அவர், உடன்படிக்கையாயிருந்தார். வெளிப்படுத்தின விசேஷத்தில், "கிறிஸ்து வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்." அது மார்பகக் கல்லாய்... பிறப்புக் கல்லாய் இருந்தது, சரியாக கூறினால், ரூபன் முதல் பென்யமீன் வரை. அது பதுமராகம், வச்சிரக்கல்லின் பிரதிபலிப்பாக இருந்தது; தேவனுடைய ஒளியின் கீழ் அவைகள் ஒன்று சேர்ந்து பிரதிபலித்தன, கிறிஸ்துவை சுற்றி உடன்படிக்கை செய்துகொண்டது, வானவில்லை. அது எதைக் குறித்துப் பேசுகிறது? ரூபன், மூத்தவன்; இளையவன் பென்யமீன்! ஆதி முதல் அந்தி வரை, "இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர் அவரே; வேர், தாவீதின் சந்ததி. அவர் விடிவெள்ளி நட்சத்திரம். அவர் முதலிலிருந்து முடிவுமாய் இருக்கிறார்; ஆல்பா, ஒமேகா; காலத்தின் துவக்கம் முதல் முடிவு வரை தேவனுடைய பிரதிபலிப்பேயாகும். இதோ அவன், தேவனுடைய ஜனங்களோடு செய்த உடன்படிக்கை. 126. இந்த மற்ற காரியங்கள், யோசேப்பு, தாவீது மற்றும் எல்லா தீர்க்கதரிசிகளும் ஒரு பிரதிபலிப்பாக இருந்தனர். ஆமென். ஏதேன் தோட்டத்திலிருந்து உண்மையான வித்திலிருந்து, அவர் இரண்டாவது முறையாக மகிமையில் வரும் வரை, பிரதிபலிக்கிறது, தம்முடைய ஜனங்களையும், அவருடைய சபையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதோ அது, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. 127. யோசேப்பும், அவனுடைய சகோதரர்களும் அவனோடு கர்வம் கொண்டிருந்தனர். "அவர்கள் காரணமில்லாமல் அவனை வெறுத்தனர்," ஏனெனில் அவன் இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் ஏவப்பட்டிருந்தான். உங்களுக்கு அது புரிகிறதா? இயற்கைக்கு மேம்பட்ட ஆவியினால் ஏவப்பட்ட காரணத்தால், காயீன் ஆபேலை ஒரு காரணமுமின்றி வெறுத்தான். மோவாப் இஸ்ரவேலர் தெய்வீக சுகமளித்தலையும், அடையாளங்களையும், அற்புதங்களையும், அற்புதங்களையும் உடையவர்களாயிருந்தபடியினால், காரணமில் லாமல் அவர்களை வெறுத்தனர். காரணமே இல்லாமல், அவனை வெறுத்து, அவனை கடந்து செல்ல விடவில்லை... 128. [ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி].......உங்கள் சகோதரனின் மனைவிக்கு ஆமென். [ஒலிநாடாவில் காலி இடம்.) 129. இப்பொழுது, என்னுடைய அருமையான நண்பர்களே, நான் ஒன்றை உங்களுடைய ஞாபகத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன், இருதயம் என்று அழைக்கப்படும் அந்த கூடாரத்தின் இடது பக்கத்திலுள்ள ஐந்தாவது விலா எலும்பின் கீழாக அதை நீங்கள் வைக்க நான் விரும்புகிறேன். 130. எந்தக் காலத்திலும் அல்லது எந்த நேரத்திலும், தேவன் ஒரு மனிதனை ஏவினபோது, அவன் எப்பொழுதுமே மதசம்பந்தமான பக்கமாகச் சென்றதில்லை, உலகத்தின் மதசம்பந்தமான ஜனங்கள் என்று அழைக்கப்படுபவர்கள். அவன் ஒருபோதும் ஸ்தாபனங்களோடு சேர்ந்து கொண்டதில்லை. அவன் எப்பொழுதுமே அக்காலத்திலிருந்த ஸ்தாபனங்களுக்கு எதிராகவும், அந்த நாளின் மதசம்பந்தமான ஒழுங்குமுறைக்கு எதிராகவும் நின்று கொண்டிருந்தான். ஒரு தீர்க்கதரிசியை எனக்குக் காண்பியுங்கள், வேதத்தின் மூலமாக ஒரு முறை எனக்குக் காண்பியுங்கள், அதாவது எந்த தேவனுடைய மனிதனும் அவனுடைய நாளின் மதசம்பந்தமான அசைவுகள் என்று அழைக்கப்படுவதை எப்பொழுதும் சமாளித்தான். ஆமென். 131. எலியாவும் கூட, தீர்க்கதரிசிகளின் பள்ளியைக் கட்டிய பிறகு, ஏன், அவன் அங்கு சென்றபோது, அவர்கள் அவனை விட்டுச் செல்ல வேண்டும் என்று விரும்பினர். அவன், "அது இங்கே மிகவும் நேராக உள்ளது" என்றான். நீங்கள் பார்த்தீர்களா? ஆகாபும் அவனுடைய நாளின் மதத் தலைவர்களும்; எலியா தன்னை கர்மேல் பர்வதத்திற்கு, பிரித்துக் கொண்டான். 132. யோவான் ஸ்நானன், தன்னை வேறுபிரித்துக் கொண்டதைக் கவனியுங்கள், அவர்களுடைய வேத சாஸ்திரத்தைக் கற்க, அவர்களுடைய பள்ளிக்கூடத்திற்குச் செல்லவில்லை. ஆனால் தேவன் அவனை ஒரு ஊழியத்திற்காக ஆயத்தப்படுத்தும்படி, வனாந்திரத்திற்குள்ளாக அனுப்பினார். 133. காயீனின் அணிகலன்கள் ஒரு தேவனுடைய மனிதனின் மேல் தங்களுடைய மதசம்பந்தமான மேலாடையாய் ஒருபோதும் போட முடியவில்லை. அது பொருந்தாது. அது உண்மை. கவனியுங்கள், காலங்களினூடாக. 134. இயேசுவானவர் வந்தபோது, அவர் வேத சாஸ்திரிகள் எவரையும் கலந்தாலோசிக்கவேயில்லை, ஆனால் அவர்களை, "ஒரு விரியன் பாம்பு கூட்டமே, இல்லை புல்லில் உள்ள பாம்புகளே" என்று அழைத்தார். 135. சீஷர்கள் தங்களுடைய ஸ்தாபனங்களோடு ஒத்துப் போகவே யில்லை. அவர்கள் ஆபேலின் பட்சத்தில் இருந்தனர். 136. யோசேப்பு ஒருபோதும் அவர்களோடு ஒத்துப் போகவில்லை. அவன் வெறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டான், மற்றவர்கள் கொண்டிருந்த அதே நோக்கத்திற்காகவே. ஏனென்றால், தேவன் இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் அவனோடு இருந்தார், அவர் மற்றவர்களோடு இருந்ததைப் பார்க்கிலும் ஒரு வித்தியாசமான வழியில் இருந்தார். அவர்கள் காரணமில்லாமல், அவனை வெறுத்தனர். காயீன் ஆபேலை காரணமில்லாமல் வெறுத்தான். சகோதரர்கள் யோசேப்பை காரணமில்லாமல் வெறுத்தனர். 137. மேலும், இன்றைக்கு, ஸ்தாபன உலகம், அது எவ்வளவு மகத்தானதாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை; நான் என்னுடைய தொப்பியைக் கழற்றி, "அவர்களுக்காக தேவனுக்கு நன்றி" என்று கூறுகிறேன். ஆனால் அவர்களுடைய மகத்தான போதனைகள் அனைத்திலும், அவர்களுடைய மகத்தான சபைகளில், மகத்தான காரியங்கள்; இன்னும், அவை எல்லாவற்றிலும், அதனோடு எந்த சம்மந்தமும் இல்லாத மனிதர்களை தேவன் அழைக்கிறார், ஏனென்றால் அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டதை சமாளிக்க மாட்டார்கள். இன்றைக்கு, அங்குதான் அசைவை உள்ளது; அவர்கள் அந்த அசைவை, காரணமில்லாமல் வெறுக்கிறார்கள். 138. அன்றொரு நாள் ஒரு மனிதன் கூறுவதைக் கேட்டேன், கிட்டத்தட்ட என்னை நிலை குலைய செய்துவிட்டது, செல்வாக்கைக் கொண்ட ஒரு மனிதன், ஒரு மகத்தான பாப்டிஸ்டு பிரசங்கியார் பேசுவதைக் கேட்பதே. 139. எவருமே கன்னி மரியாளைத் தொழுதுகொள்ள வேண்டும் என்பது வேதப்பிரகாரமானதல்ல, என்பதைக், குறித்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அது எவ்வளவு உண்மை! அது உண்மை. கிறிஸ்துவைத் தவிர வேறு யாரையும் தொழுதுகொள்ள வேதவாக்கியமே இல்லை என்று அவர் கூறினார். அது உண்மை. அவர், "தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார், அவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணம் இருந்தது" என்றார். அது உண்மை. 140. அதன்பின்னர், அந்த அருமையான, அற்புதமான வேதப் போதனைக்குப் பிறகு, திரும்பிப் பார்த்து, "உலகத்தில் ஒரு போதும் ஒரு அற்புதமும் நடந்ததில்லை" என்றான். ஏனென்றால் அவன் தெய்வீக சுகமளித்தலுக்கு விரோதமானவர், அவர் திரும்பி, "கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு ஒரு அற்புதமும் ஒருபோதும் செய்யப்படவேயில்லை. கிறிஸ்துவுக்குப் பிறகு மரித்தோரை எவருமே எழுப்பவில்லை, ஏனென்றால் அவர் ஒருவர் மாத்திரமே நித்திய ஜீவனை உடையவராயிருந்தார்" என்றார். 141. ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவனுடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்து, தம்முடைய சீஷர்களிடத்தில், "போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியியுங்கள்; வியாதியஸ்தரை சொஸ்தமாக்குங்கள்; மரித்தோரை எழுப்புங்கள்; குஷ்டரோகிகளை சுத்தம் பண்ணுங்கள்" என்றார். அதைத்தான் இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் கூறினார். 142. எப்படி மனிதர்கள் மார்க்க சம்பந்தமாக அவ்வளவு குருடாயிருக்க முடியும்? ஸ்தாபன தடைகளின் நிமித்தமாக அவர்கள் குறுகிய சிந்தையுள்ளவர்களாகி, காரணமில்லாமல் தங்களுடைய சகோதரர்களை வெறுக்கின்றனர். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? மிகவும் குறுகிய, மிகவும் அற்பமான, அவர்கள் தங்களுடைய கௌரவத்தின் காரணமாக அதைச் செய்கிறார்கள். 143. இன்றைக்கு தேசத்தின் ஒரு மகத்தான ஊழியக்காரர், அவர் ஏன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறவில்லை என்று கேட்கப்பட்டது, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருந்த அந்தஸ்திலுள்ள மற்ற மனிதர்களால் அது அளிக்கப்பட்ட பிறகு. அதற்கு அவர், "அது என்னுடைய ஊழியத்தை பாதித்துவிடும்" என்றார். நீங்கள் என்னிடம் கூறினால், எந்த நேரத்திலும்... 144. அது ஒரு தனிப்பட்ட நபரின் ஊழியத்தை பாதிக்கலாம், ஆனால் அது இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை தொடர்ந்து சேதப்படுத்தாது. அது இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் நோக்கத்தை மேலும் அதிகரிக்கும். 145. ஆனால் இந்த திரு. வேதபண்டிதர் மரித்தோரிலிருந்து ஒரு நபரும் ஒருபோதும் எழுந்திருக்கவில்லை என்று கூறினார். மேலும், "இன்று தேசத்தில் ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன், அவர்கள் மரித்தோர் உயிரோடெழுவதைக் கண்டதாக உரிமை கோருகின்றனர். ஆனால்," என்று கூறி, "ஆ! எந்த சுகமளித்தலுக்கும் அல்லது வேறு எந்த காரியத்திற்கும் ஒருபோதும் ஒரு விஞ்ஞான நிரூபணமே கிடையாது" என்றார். 146. இப்பொழுது, நீங்கள் பாருங்கள், இங்கே அது உள்ளது, என்னுடைய சகோதரனே சகோதரியே. நீங்கள் இதை உண்மையாகவே கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு காரணம் இதுதான். இன்றைக்கு புருஷர்கள்... 147. கர்த்தராகிய இயேசுவின் நாட்களில், ஏற்பாட்டின் நாட்களில், மனிதர்கள் தேவனில் விசுவாசம் கொண்டிருந்தபோது, அவர்கள் ஒரு அற்புதம் நிகழ்த்தப்பட்டதைக் குறித்து கேள்விப்பட்டும், அவர்கள் அதை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்க ஒருபோதும் முயற்சிக் கவில்லை. அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் அதை அப்படியே விசுவாசித்தனர், ஏனென்றால் தேவன் இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 148. ஆனால், இன்றைக்கோ, விசுவாச துரோகக் குழு மத நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது, அவன் விஞ்ஞான ரீதியாக காரியங்களை நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். 149. நான் இதைக் கூறட்டும், அது பரலோகத்திலிருந்து வருகிறது என்று என் இருதயத்திற்கு நான் நம்புகிறேன்,. அது நிரூபிக்கப்படக் கூடிய ஒரு நேரமே கிடையாது. ஏனென்றால் உங்களால் தேவனை நிரூபிக்க முடிந்தால், அப்பொழுது அவர் இனி விசுவாசத்தினால் ஏற்றுக் கொள்ளப் படமாட்டார்; அது ஒரு அத்தாட்சி. நாம் விசுவாசத்தினால் தேவனையும், அவருடைய அற்புதங்களையும் விசுவாசிக்கிறோம். இல்லாதவைகளை நாம் அவைகளைப் போல் அழைக்கிறோம், ஏனென்றால் தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்; அது என்னவாயிருந்தாலும் பரவாயில்லை. 150. சாராளின் பால் நரம்புகள் வற்றிப்போகவில்லை என்பதை ஆபிரகாமினால் நிரூபிக்க முடியவில்லை. அந்த குழாய்கள் போன்றவை கருத்தரிக்கப்பட்டன என்பதை அவரால் நிரூபிக்க முடியவில்லை. அவர்களால், அவளால் முடியும்...அவர்களால் இவைகளில் ஒன்றையும் நிரூபிக்க முடியவில்லை. விதையின் சோதனைகளின் மூலம், அவைகள் கருவுறுகின்றன என்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் எப்படியாயினும், அவன் அதை விசுவாசித்து, அதற்கு முரணாயிருந்த எந்தக் காரியத்தையும் புறக்கணித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைத்தான். ஏனென்றால், திரைக்குள்ளாக, தேவனுடைய நம்பிக்கை தேவனுடைய வார்த்தையின் மேல் தங்கியிருந்தது, அழைத்த அந்த காரியங்கள், விஞ்ஞானப் பூர்வமாகவோ அல்லது இல்லை றோ அல்ல "தேவன் அவ்வண்ணமாய்க் கூறினபடியால், அது உண்மை." அங்குதான் காரியம். 151. நாங்கள் விசுவாசிக்கிறோம். விசுவாசத்தினாலே நாம் அதைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனால், அந்த சகோதரன், அவரோடு வாக்குவாதம் செய்யாதிருந்தால், நான் அதில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் பவுல் எப்படி கல்லெறிந்து கொல்லப்பட்டான் என்பதை சகோதரன் மாத்திரம் வாசித்திருந்தால், பரிசுத்தவான்கள் அவரைச் சூழ்ந்து நின்று, அவனுக்குள் ஜீவன் திரும்ப வரும்வரை ஜெபித்தனர். எப்படியாய் பவுல் ஓர் இரவு, முழுவதும் பிரசங்கித்தபோது, ஒரு இரவு மாடியிலிருந்து ஒரு மனிதன் கீழே விழுந்து அவன் தானே மரித்துப் போனான், ஒரு வாலிபன்; பவுல் தன்னுடைய சரீரத்தை அவன் மேல் கிடத்த, ஜீவ ஆவி அவனுக்குள் மீண்டும் வந்தது. எப்படியாய் எலியா ஒரு ஸ்திரீயினுடைய குழந்தை மரித்தப் பிறகு, கிறிஸ்துவின் வருகைக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே அதை எழுப்பினான். மனிதர்கள், பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதமில்லாமல் கூட, இந்த நபர்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டு தாக்க பயப்படுகின்றனர். என்னே, என்னே! எவ்வளவு பரிதாபம்! 152. ஏன்? அதற்குக் காரணம் அவர்கள் அகந்தையுள்ளவர்களாய், அவர்கள் தங்களுடைய சகோதரர்களை காரணமில்லாமல் வெறுக்கின்றனர்; யோசேப்பு காரணமில்லாமல் வெறுக்கப்பட்டான். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? அவன் வெறுக்கப்பட்டான். அவன் வெறுக்கப்படுவதற்கு பாத்திரவான் என்ற காரணத்தினால் அல்ல; ஏனென்றால், ஒரு காரணமும் இல்லாமலே. அவர்கள் அவனை விசுவாசிக்கவில்லை. அவன் ஒரு வித்தியாசமான மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். 153. இப்பொழுது நம்முடைய நேரம் குறுகியதாயிருக்கிறபடியால், நான் இதைக் கூறுகிறேன். நான் இதை முழு இருதயத்தோடும் கூறுகிறேன். அவர்கள் இன்றைக்கு, இயற்கைக்கு மேம்பட்ட சபையை வெறுக்கின்றனர். அது பொறாமை. அது அற்பமான பொறாமையாயுள்ளது, அது மானிட வர்க்கத்தின் மத்தியில் இருந்து வருகிறது. 154. சீஷர்கள் அதை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் தங்களைக் குறித்து மிகவும் வெட்கமடைந்தனர்! காரணம், பத்து நாட்களுக்கு முன்னர், தேவன் அவர்களுக்கு வியாதியஸ்தரை சுகப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், மரித்தோரை உயிரோடெழுப்பவும் அதிகாரத்தை அளித்தார். அவர்களுக்கு முன்பாக ஒரு காக்காய் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் இருந்தான். இயேசு, அவர் மலையிலிருந்து இறங்கி வந்து, அந்தப் பையனைக் குணப்படுத்தினார். அவர்கள் அவரிடத்தில், "ஏன் எங்களால் முடியவில்லை?" என்று கேட்டனர். அவர், "நான்-நான் என்னுடைய வல்லமையை திரும்ப பெற்றுக் கொண்டேன்" என்று கூறவில்லை. அவர், "நான் உங்களுக்கு வல்லமையை அளிக்கிறேன்" என்றார். அவர் அதை சபைக்கு எங்கிருந்து கொடுத்தார் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன், ஆனால் அவர் அதை எங்கு திரும்பப் பெற்றுக்கொண்டார் என்பதை உங்களால் எனக்குக் காண்பிக்க முடியாது. பார்த்தீர்களா? இயேசு தம்முடைய பயபக்தியான வார்த்தைகளை எதன் பேரில் வைத்திருந்தார்? "உங்களுடைய அவிசுவாசத்தினிமித்தம்." 155. அதன்பின்னர் ஒரு சில நாட்கள் கழித்து, அவர்களுடைய மதசம்பந்தமான மண்டலத்தில் இல்லாத ஒரு மனிதனை அவர்கள் கண்டனர். இயேசு இந்த காரியங்களை உரைத்ததை அவன் கேட்டிருந்தான், அவன் அந்த வேலையை செய்து கொண்டிருந்தான். அவன் பிசாசுகளைத் துரத்திக் கொண்டிருந்தான். பேதுருவும் யோவானும் அவனிடம் வந்து, அவன் அவர்களுடைய குழுவைச் சேர்ந்திருக்க வேண்டும், இல்லையென்றால் அவனால் இதைச் செய்ய முடியாது. "நீங்கள் எங்களைப் பின்பற்றி, எங்களோடு இணைய வேண்டும். நாங்கள் சபையாயிருக்கிறோம், நீங்கள் அதைச் செய்யத்தான் வேண்டும்" என்றனர். அவர்கள் தங்களுடைய சொந்த வேலையில் ஈடுபடும்படி அவர்களுக்கு தெரியப்படுத்தினார். அவர் அவர்களுடைய ஸ்தாபனத்தில் சேராமலேயே நன்றாகப் பழகிக்கொண்டிருந்தார். 156. எனவே, நாம் இன்றைக்கு இருப்பதுபோல, சிறிய, பெண்மைத் தனமான குட்டிப் பிள்ளைகளைப் போல; சிறிய, வாலிப பிள்ளைகளுக்கான கருத்துக்கள், திரும்பி ஓடி, "நாங்கள் அவனைக் கண்டுபிடித்தோம், அவன் பிசாசுகளைத் துரத்திக் கொண்டிருந்தான்" என்றனர். அது என்னவாயிருந்தது? அவர்களால் செய்ய முடியாததை அவன் செய்து கொண்டிருந்த காரணத்தால் அவர்கள் பொறாமை கொண்டனர். அவர்கள் மாம்சபிரகாரமாக உடையவர்களாயிருந்தனர். அவர்களுடைய கண்கள், அவர்களுடைய புரிந்துகொள்ளுதலின்படி, யோசேப்பின் சகோதரரைப் போலிருந்தது, அப்பொழுது பிரகாசிக்கப்படாமல் இருந்தது, எனவே அவர்கள் திரும்பி வந்து அவனைப் பற்றிப் பேசி, இயேசுவுக்கு அறிவித்தனர். 157. இயேசு, "அவனை விட்டுவிடுங்கள்" என்றார். ஆமென். "அவன் ஒரு நல்ல பணியைச் செய்து கொண்டிருக்கிறார். நான் உனக்கு செய்யும்படி கட்டளையிட்டதை அவன் செய்து கொண்டிருக்கிறான், நீங்கள் அதைச் செய்யத் தவறுகிறீர்கள்." "தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்." 158. எனவே இப்பொழுது, என்னுடைய அன்பார்ந்த மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் சகோதரர்களே, ஏனென்றால் அது உங்களுடைய சபையினூடாக வரவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், தேவன் இந்த பரிசுத்த உருளைகளில் ஆபிரகாமுக்கு கல்லுகளை எழும்ப வல்லவராயிருக்கிறார். அது உண்மை. அவருடைய பணியைச் செய்யப் போகிற ஒருவரை அவர் உடையவராயிருப்பார். அது உண்மை. அவர்களுடைய எல்லாத் தோல்விகளினாலும், தவறுகளினாலும், இன்னும் என்னென்னவெல்லாம் அவர்கள் செய்தாலும், இஸ்ரவேலர் அதேக் காரியத்தையே செய்தனர், ஆனால் அந்த நீதியான வித்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. 159. நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவனுடைய கிருபையினால் இன்றைக்கு நாம் அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருக்கிறோம். நான் அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நீங்கள் அப்படித்தானே? இந்த புத்தாண்டின் துவக்கத்தில் என் இருதயம் களிகூருகிறது, தேவன் தம்முடைய ஆச்சரியமான கிருபையினூடாக என் பெயரை ஜீவ புத்தகத்தில் சேர்த்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்கும், புறம்பே தள்ளியிருக்கிற அவருடைய ஜனங்களின் மத்தியில் நான் தொடர்பு கொண்டிருக்கிறேன் என்ற புரிந்துகொள்ளுதலை எனக்கு அளிக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். மேலும், சீடர்களுடன், நான் இதைச் சொல்லலாம், அவருடைய நாமத்தின் நிந்தையைச் சுமப்பதை சிலாக்கியமாகக் கருதுகிறேன். ஆம், ஐயா. நானும் அவர்களில் ஒருவன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 160. இப்பொழுது நாம் இங்கே அடுத்த ஆராதனையை, யோசேப் பிலிருந்து துவங்குகிறோம், அது இன்றிரவு அல்லது திங்கட்கிழமை இரவாக இருக்கலாம், ஒன்று, ஏனென்றால் நம்முடைய நேரம் முடிந்துவிட்டது. 161. ஆனால், நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? அவர் அற்புதமானவர். இழிவுபடுத்தப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட அந்த நீண்ட சரத்துடன் நான் கைகோர்க்க முடியும் என்று இன்று நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், தேசம் முழுவதிலும் உள்ள மதத்தலைவர்களால் வெறுக்கப்பட்டனர். இதோ அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாழ்ந்தவர்கள். அது உண்மை. மதசம்பந்தமானவர்கள், உலகத்தைக் குறித்து பேசினாலும், கல்வியிலும், சமுதாயத்திலும் பேசினாலும், அவர்கள் அவர்களுக்கு மேலாக இருக்கிறார்கள். நாங்கள் தாழ்மையாய் இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறோம். ஏனென்றால், தங்களைத் தாழ்த்துகிற வர்களுக்கு, தேவன் என்றோ ஒரு நாள் இரண்டாம் முறை, மகிமையில், தம்முடைய சபையை உயர்த்த வருவார். அதுவரைக்கும், "பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத் திற்காக ஊக்கமாய்ப் போராடுவோம்.' நாம் ஜெபிப்போமாக. 162. இப்பொழுது நம்முடைய தலைகள் வணங்கியிருக்கையில், இந்தக் காலையில் இன்னும் இந்த கிறிஸ்துவையும், அவருடைய மகத்தான ஆசீர்வாதங்களையும், அவருடைய மகத்தான வல்லமைகளையும், ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத யாராவது ஒருவர் இருப்பார்களா அல்லது அநேகர் இருப்பார்களா என்று நான் நினைக்கிறேன். இன்றைக்கு நீங்கள் உங்களுடைய தெரிந்துகொள்ளுதலைச் செய்து, "கர்த்தராகிய இயேசுவே, அது நானே. நான் என்னுடைய முழு இருதயத்தோடும், கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலரோடு வழியை எடுக்கும்படிக்கு உம்முடைய ஊழியக்காரனாயிருக்க வாஞ்சிக்கிறேன். கர்த்தாவே, நான் இப்பொழுது காண்கிறேன், அது உலகம் பேசுவதைக் குறித்து அல்ல; அதைத்தான் உம்முடைய வேதம் கூறுகிறது. அது என்னை உலகம் அழைக்கிறதல்ல. அவர்கள் யோசேப்பை வெறுத்தது போல, அவர்கள் என்னை வெறுத்தனர். அவர்கள் ஆபேலை வெறுத்தது போல, அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் யோவானை வெறுத்தது போல, அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் தானியேலை வெறுத்தது போல, அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். சகரியாவைப் போல அவர்கள் எசேக்கியேலை வெறுத்தது போல, அவர்கள் என்னை வெறுத்தனர். அவர்கள் இயேசுவை வெறுத்தது போல, அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் அப்போஸ்தலர்களையும், உம்மைப் பின்பற்றினவர்களையும் காரணமில்லாமல் வெறுத்தது போல, அவர்கள் என்னையும் வெறுக்கிறார்கள். கர்த்தாவே, நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன்" என்று கூறுங்கள். 163. நீங்கள் வெளியே வந்ததைப் போன்ற, ஒரு அனுபவத்தை நீங்கள் எப்போதாவது பெற்றிருக்கிறீர்களா? "நாம் ஒரு ராஜரீக ஆசாரியக் கூட்டமாயும், ஒரு பரிசுத்த ஜாதியாயும், தேவனுக்கு ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துகிறவர்களாயும் இருக்கிறோம்; அதாவது, நம்முடைய உதடுகளின் கனிகள் அவருக்குத் துதி செலுத்துகிறதாயிருக்கிறது." கொந்தளிக்கும் உலகத்தின் மத்தியில் உங்களால் நிற்க முடியுமா? உங்களால் உங்களுடைய எஜமானுக்கு முன்பாக நிற்க முடியுமா? உங்களால் உங்களுடைய இருதயத்தில் ஒரு தாழ்மையோடும், உங்களுடைய இருதயத்தில் அன்போடும், இந்த உலகத்தின் பாவிகளுக்காக, உங்களுக்குள்ளாக கிறிஸ்துவின் ஜீவனைக் கொண்டு, தேவனுடைய மகிமைக்கு ஒரு சாட்சியையும், துதியையும் கொடுப்பீர்களா? நீங்கள் அந்த அனுபவம் பெற்றிருக்கவில்லையென்றால், இன்றைக்கு, ஏன் உலகத்தையும், ஜீவனையும், ஒவ்வொரு காரியத்தையும் புதிதாகத் துவங்கக் கூடாது, அவரிடம் உங்களுடைய கரத்தை உயர்த்தி, "கர்த்தாவே, நான் இப்பொழுது அதை ஏற்றுக்கொண்டு, நீர் எனக்கு ஆவியின் அபிஷேகத்தை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறுங்கள். 164. இப்பொழுது, எங்களுடைய பரலோகப் பிதாவே, இந்தக் காலையில் சிறு சபையானது, சுடப்பட்டதை நாங்கள் அறிவோம், சத்துரு தன்னுடைய அம்புகளை எய்து, அவளை ஒடுக்கினான். கர்த்தாவே, அவர்களுடைய பாவ ஆத்துமாக்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் இந்த உலகத்தின் தேவனால் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியார்கள். 164. சபையானது, பொதுவாக, இன்றைக்கு உலகம் முழுவதிலும்; சத்துரு, மதசம்பந்தமான ஜனங்கள், ஒவ்வொரு அம்புகளையும் அவர்கள் மேல் எய்துள்ளனர். ஆனால் இவை யாவுமே இருந்த போதிலும், மகத்தான எழுப்புதல் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான எளிய, ஏழை, புறக்கணிக்கப்பட்ட பிள்ளைகள் இந்த இடங்களுக்குள் தடுமாறி, உம்முடைய அற்புத கரத்தைக் கண்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இனிமேல் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல. அவர்கள் பரதேசிகளும், அந்நியர்களு மாயிருக்கிறார்கள். அவர்கள் உலகத்திற்காக கவலை கொள்ளவில்லை, ஆனால் அவர்கள் வரப்போகும் ஒரு நகரத்தையே நாடிக்கொண்டிருக்கிறார்கள், அதைக் கட்டி உண்டாக்கின தேவன் தாமே. வியாதியஸ்தரை சுகப்படுத்துகிற உம்முடைய சுகமளிக்கும் வல்லமையை, உம்முடைய அடையாளங்களும், அதிசயங்களும் உம்முடைய ஜனங்கள் மத்தியில் நிகழ்த்தப்படுவதையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள். மகத்தான காரியங்கள் சம்பவிக்கின்றன, இருப்பினும் அவர்கள் அதை கண்டனம் செய்து, அதை அடக்கி வைக்க முயற்சிக்கின்றனர். உம்முடைய ஊழியக்காரர்கள் உள்ளே நுழைந்து ஒரு எழுப்புதலை ஏற்படுத்துகிறார்கள், அவர்கள் தாழ்மையுள் ளவர்களை தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் கொண்டு செல்கிறார்கள். 166. இந்தக் காலையில் நமக்கு மத்தியில், மற்ற தேசங்களுக்குச் செல்லவிருக்கும் இந்த மிஷனரிமார்களைக் கொண்ட சிலாக்கியம் பெற்றுள்ளோம். 167. ஒன்று, இஸ்ரவேலிற்குள் செல்லுதல். ஓ, தேவனே, அது அங்கே உள்ளது. கர்த்தாவே, அவரோடு உம்முடைய ஆவியை ஊற்றும். மகத்தான காரியங்கள் நிறைவேற்றப்பட்டு, அந்த பரிதாபமாய் அலைந்து திரிந்த யூதர்களை திரும்பி வரும்படிச் செய்யும். ஆதியில் அவர்களுடைய பிதாக்கள் செய்ததுபோல, அவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வார்களாக. 168. இதோ ஒரு சகோதரன் கியூபாவிற்கு, தீவுகளுக்குச் செல்கிறார். நீர், "பூமியின் கடைசி பரியந்தம்" என்றீர். 169. ஏதோ ஒன்று இந்த சகோதரர்களுடைய இருதயத்தை இழுத்து, இழுத்துக் கொண்டிருக்கிறது. தங்களுடைய வீடுகளையும், தங்களுடைய அன்பார்ந்தவர்களையும் விட்டு, இந்த உலகத்தின் இன்பங்களுக்காகவும், நல்ல நேரங்களுக்காகவும் கவலைப்படாமல், ஆனால் வேலையை நிறுத்த முயற்சிக்கிற, எதிர்ப்பாளரின் கீழ்; தரிசு நிலங்களுக்கு வெளியே செல்வது. ஆனால் காளை வண்டியைத் திரும்பக் கொண்டு வந்ததைப் போல, அதில் கட்டளைகளையும், உடன்படிக்கைப் பெட்டியையும், அவர்கள் தங்களுடைய சிறு பிள்ளைகளை கூச்சலிடும்படி விட்டுவிட்டு, அவர்கள் பாதையில் கீழே இறங்கி, பாடிக் கொண்டு, கன்மலையண்டை சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஊழியத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். 170. நம்முடைய சபையில் ஜெர்மனியிலிருந்து வந்துள்ள சகோதரன் ஜான் இன்று காலையும் கூட அமர்ந்திருப்பதை நாங்கள் காண்கிறோம். அவன் எப்படியாய் ஏழையாக வளர்க்கப் பட்டிருக்கிறான். தேசம் முழுவதும் ஒரு சிறு வண்டியை இழுத்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அவருக்காக உமக்கு நன்றி! 171. இந்த வாலிப புருஷர்களும், அருகில் அமர்ந்துள்ள மற்ற ஊழியக்காரர்களும், சபையார் யாவரும். நான் கேட்டபோது, பிதாவே, இப்படிப்பட்ட ஒரு காலத்தின் கீழ் விசுவாசித்து, ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ கிறிஸ்துவை தங்களுடைய இருதயத்தில் கொண்டிருக்கவில்லையென்றால், நீர் மாறாதவராயிருக்கிறீர் என்றும், உம்முடைய சபை மாறாததாய் இருக்கிறது என்றும், அவர்கள் சுவிசேஷத்தின் எல்லா அத்தாட்சியையும் கண்டு, நிச்சயமாகவே தங்களுடைய கரத்தை உயர்த்தியிருப்பார்கள். 172. ஒவ்வொருவருக்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் சுகவீனமாயிருந்தால் அவர்களுடைய சரீரங்களை சுகப்படுத்தி, அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சைகளை அவர்களுக்கு அருளும். பிதாவே இதை அருளும், நாங்கள் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். 173. நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நாம் ஒரு சில நிமிடங்கள் அப்படியே தியானிப்போம். மென்மையாக, ஜெபத்தில் இருங்கள். இந்த பரிசுத்த ஆவியின் திட்டத்திற்காக முதலில் மரித்த ஒருவர், யோவான் ஸ்நானன், ஆனால் அவன் ஒரு மனிதனைப் போல மரித்தான்; அதன்பின்னர் கர்த்தராகிய இயேசு வந்தார், அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தனர், ஆவியானவர் மனிதரை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அவர் பிரசங்கித்தார். அதன்பின்னர் அவர்கள் ஸ்தேவானைக் கல்லெறிந்தனர், அவன் பாவத்திற்கு எதிராக பிரசங்கித்தனர், அவர்கள், மிகவும் கோபமடைந்து, அவர்கள் அவனுடைய தலையை மோதினர்; ஆனால் அவன் ஆவியில் மரித்து, அவன் ஆவியை விட்டான், அந்த ஜீவனை அளிக்கும் மற்றவர்களோடு, சேர்ந்து கொள்ள சென்றான். அங்கே பேதுருவும், பவுலும், திவ்ய வாசகனாகிய யோவானும் இருந்தனர், இந்த சுவிசேஷம் பிரகாசிக்கும்படியாக அவர்கள் தங்களுடைய ஜீவியங்களை துறந்தனர்; பண்டைய தீர்க்கதரிசிகளைப் போல அவர்கள் தங்கள் இரத்தத்தை கலந்தனர், (அது இன்னும் வித்தை, துன்புறுத்தப்படுகிறது.) எனவே உண்மையான தேவனுடைய வார்த்தையை நேர்மையாகக் கூறப்பட முடியும். பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள், "எது வரைக்கும்?" என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தன. தவறு செய்தவர்களை கர்த்தர் தண்டிக்க உள்ளார்; ஆனால் இன்னும் அநேகர் தங்களுடைய ஜீவனின் இரத்தத்தைக் கொடுக்கப் போகிறார்கள் இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷத்திற்காகவும், அதனுடைய சிவப்பு நிற வெள்ளத்திற்காகவும். தொடர்ந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆம், அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம், இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. 174. (சகோதரன் பிரான்ஹாம், இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது என்று மௌனமாக பாடுகிறார்-ஆசி.) 175. ஓ தேவனே! கர்த்தராகிய இயேசுவே, வாரும்! நாங்கள் உமக்கு முன்பாக தாழ்மையாய் இருக்கையில், இப்பொழுது எங்களை வார்ப்பியும். எங்களுடைய ஜீவியங்களிலிருந்தும், எங்களுடைய இருதயங்களிலிருந்தும், எல்லா அலட்சியங்களையும் அகற்றும், ஆவியின் இனிமையினால் கண்கள் இனிமையாக காணப்படுகின்றன. தேவன் தம்முடைய வார்த்தையை எடுத்து அதற்கு தண்ணீர் பாய்ச்சுகிறார். பிதாவே, 'சுவிசேஷத்தை சுமப்பவர்களாக இருக்கும்படி நீர் எங்களை சேர்த்துக் கொண்டதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 176. சபையின் ஒவ்வொரு தேவைக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் அன்பார்ந்த போதகருக்காக நாங்கள் ஜெபிக்கிறோம், ஓ தேவனே; உண்மையுள்ள ஊழியக்காரன், ஒருபோதும் களைப்படையாதவன், எப்பொழுதும் செல்ல ஆயத்தமாயிருப்பான். இன்றைக்கு, அவனுடைய இருதயத்தில் பேசி, அங்கே ஒரு மகத்தான பலன் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவன் அறிந்து கொள்ளட்டும் அந்த உண்மையுள்ள போதகர்களுக்காக அவர்கள் மறுபுறம் மீட்கப்பட்ட அனைவருடனும் கூடிவருகிறார்கள். 177. மற்ற போதகர்களையும், மிஷனரிமார்களையும், கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்களையும் எங்கும் ஆசீர்வதியும். கர்த்தாவே, எங்களுடைய குறைகளை மன்னியும். 178. இப்பொழுது எங்களுடைய இருதயங்களில் ஒரு தேவை இருக்குமானால், கர்த்தாவே, நீர் பிரசன்னமாயிருக்கையில், நீர் எங்களை ஆசீர்வதிக்கமாட்டீரா? கர்த்தாவே, எங்கள் மத்தியில் சுகவீனம் இருக்குமானால், இன்றைக்கு இந்த சிறு சபைக்குள்ளாக வந்துள்ள எவரேனும், அவர்கள் அப்பால் நோக்கிப் பார்த்து, அவர்கள் கல்வாரியைக் காண்கிறார்கள், அங்கே உண்மையான வித்து இருக்கிறது என்று காண்கிறார்கள். சாத்தான் அதை மரணத்தினால் அழிக்க முடியும் என்று நினைத்தான், ஆனால் தேவன் அதை மீண்டும் எழுப்பினார். அதைச் செய்ய முடியாது! தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை செய்திருக்கிறார், தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தோடு தரித்திருக்கிறார். ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உண்மையா யிருக்கிறது. நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை வாக்குத்தத்தம் செய்தீர், நாங்கள் அதைப் பெற்றுள்ளோம். நாம் அதை உணருகிறோம். நம்மால் விளக்க முடியாத ஏதோ ஒன்று, நமக்குள், அசைந்து கொண்டிருக்கிறது. ஓ தேவனே! தொல்லையின் மத்தியில், "அமைதியாய் உட்காருங்கள்" என்று கூறுகிற ஏதோ ஒன்று பின்னால் நின்று கொண்டிருப்பதை நாங்கள் உணருகிறோம். வித்தை புயல்கள் தாக்கலாம், கப்பல் நம்முடைய சிறு பட்டைகளை அசைக்கலாம். நீங்கள் ஒரு வழியை, கீழே, சுற்றி, அல்லது அதனூடாக, ஏதோ ஒரு வழியில் உண்டாக்கிக் கொள்வீர்கள். எனவே, கர்த்தாவே, நாங்கள் வார்த்தைக்கு விரோதமாக நின்று கொண்டிருக்கிறோம். 179. எவரேனும் கூட்டத்தில் சுகவீனமாயிருந்தால், இந்த ஆவியானவர், இப்பொழுது கட்டிடத்தில் இருக்கிறார் என்றும், மிகுந்த அன்பில் இறங்கி வந்து, "என் பிள்ளை, இது நானாயிருக்கிறது. உங்களை சிருஷ்டித்த பிதா நானே. நான்தான் பூமியிலிருந்து மூலக்கூறுகளைக் கொண்டு வந்து, நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உருவாக்கினேன். சாத்தான் என்னுடைய பணியில் பிரவேசிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். பிள்ளையே, என் வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொள்" என்று கூற வேண்டும் என்று இப்பொழுது நான் ஜெபிக்கிறேன். 180. நீர் இங்கிருக்கிறீர் என்று விசுவாசித்து, நான் இந்த விசுவாச ஜெபத்தை ஏறெடுக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய கரங்களை ஒவ்வொரு இருதயத்திற்கும் நீட்டி, ஜனங்களை விட்டு வியாதி நீங்கிப்போகட்டும். நான் பிசாசைக் கடிந்துகொள்கிறேன்; ஒடுக்கும் பிசாசு, பயம் என்னும் பிசாசு, எல்லாவிதமான வியாதிகளின் பிசாசையுமே. நீர், "என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்" என்று கூறியிருக்கிறீர். இந்த சபையின் ஐக்கியத்தில், இந்த காலையில் உள்ள இந்த ஆவியில், ஜனங்களிடத்திலிருந்து ஒவ்வொரு தீமையையும் நாங்கள் துரத்துகிறோம்; நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் பலியினால், நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு, சுத்தமாக, அதை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். 181. வரப்போகிற ஊழியங்களை எங்களுக்கு ஆசீர்வதியும். நாங்கள் என்ன செய்கிற எதிலும் எங்களை ஆசீர்வதியும். கர்த்தாவே, ஊழியக்காரர்களோடும், சுவிசேஷகர்களோடும், மிஷனரிகளோடும் அவர்களுடைய இடங்களுக்குச் செல்லும். என்றாவது ஒரு நாள் நாங்கள் உம்முடைய பாதத்தில் சந்திக்க அருள்புரியும். அதன்பின்னர் நாங்கள் நம்முடைய வெற்றிச் சின்னங்களை கீழே வைப்போம். தேவனே, அவர்கள் எல்லா வகையிலும் இருப்பார்கள். அங்கே வெள்ளையன், மஞ்சள் நிற மனிதன், கறுப்பு நிற மனிதனும் இருப்பான். எல்லோரும்மாக ஒன்று சேர்ந்து, நாங்கள், "கர்த்தாவே, இதோ அவர்கள் இருக்கிறார்கள்" என்று கூறுவோம். அது என்னே ஒரு களிகூருதலின் நாளாய் இருக்கும்! பகற்காலமிருக்குமட்டும் நாம் கிரியை செய்வோமாக, ஏனென்றால் ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. நாங்கள் இந்த ஆசீர்வாதங்களை தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நேச நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். எல்லாம் கூடும், விசுவாசிக்க மாத்திரமே செய்யுங்கள்; விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், மாத்திரம்... (அது என்ன?) எல்லாக் காரியங்களும் கூடும், மாத்திரமே... 182. எத்தனை பேர் ஒரு தேவையை உடையவர்களாயிருந்து, இப்பொழுதே விசுவாசிக்க முடிந்தது? நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, "இப்பொழுது நான் பெற்றுக்கொள்கிறேன்" என்று கூறுங்கள். இப்பொழுது நான் பெற்றுக்கொள்கிறேன், இப்பொழுது நான் பெற்றுக்கொள்கிறேன், எல்லாம் கூடும், இப்பொழுது நான் பெற்றுக்கொள்கிறேன்; இப்பொழுது நான் பெற்றுக்கொள்கிறேன், இப்பொழுது நான் பெற்றுக்கொள்கிறேன், எல்லாம் கூடும், இப்பொழுது நான் பெற்றுக்கொள்கிறேன். 183. இப்பொழுது நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. சகோதரியே, நீங்கள் விரும்பினால், இசைப் பேழையை இசைத்துக் கொண்டேயிருங்கள். நீங்கள் அவரை ஏற்றுக்கொள்கிறீர்களா? 184. நீங்கள், "சகோதரன் பிரான்ஹாம், நான் சிறிது காலமாக சுகவீனமாயிருக்கிறேன். என்னால் ஜெயங்கொள்ள முடியாதது போன்று காணப்பட்ட ஏதோ ஒன்று இருந்து வருகிறது. தனிப்பட்ட நபர்களால் எனக்காக ஜெபிக்கப்பட்டிருக்கிறேன்" என்று கூறுகிறீர்கள். 185. சகோதரனே, சகோதரியே, அது நல்லதுதான், ஆனால் அது என்னவென்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? அது உங்களுக்கு அளிக்கப்பட்ட சிறு வாக்குத்தத்தமாயுள்ளது. "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்." 186. நீங்கள் அதை இந்தக் காலையில் கல்வாரிக்குள் போட மாட்டீர்களா? அதை உங்களுக்கு அளிக்கிற அந்த ஆவியானவரே, அதன் முனையை இங்கே பிடித்துக் கொள்ளுங்கள். அதை கல்வாரிக்குள் எறிந்துவிட்டு, "அங்கே என்னுடைய நங்கூரம் பிடித்திருக்கிறது. இப்பொழுது நான் இப்பொழுதே பெற்றுக்கொள்கிறேன். இப்பொழுது எல்லாம் முடிந்துவிட்டது. என்ன சம்பவித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, இப்பொழுது என்னுடைய நங்கூரம் திரைக்குள்ளாக பற்றிக்கொண்டிருக்கிறது, நான் கேட்பதை அப்படியே பெற்றுக்கொள்கிறேன். நான் அதை வைத்திருக்கிறேன் என்பதை நான் அறிவேன். தேவனுடைய வார்த்தை அவ்வண்ணமாய் கூறியுள்ளது. தேவனே, நான் இப்பொழுது உம்மையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறுங்கள். உங்களுக்கு ஒருக்கால் கவலைகள், பணப்பிரச்சனைகள், அது என்னவாயிருந்தாலும் இருக்கலாம். அது என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அதை கல்வாரியை நோக்கி போட்டுவிடுங்கள். ஏனென்றால் எல்லாக் காரியங்களும்- எல்லாக் காரியங்களும் கூடும், விசுவாசிக்க மாத்திரமே செய்யுங்கள். 187. அது உண்மையாகவே இனிமையாக உள்ளே பதிய விடுகின்றது. அது அற்புதமாயிருக்கவில்லையா? இது என்னுடைய ஆராதனையின் நேரம். வார்த்தை விதைக்கப்பட்டிருக்கிறது, நீங்கள் பாருங்கள், இப்பொழுது தேவன் அதற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார். அதை மீண்டும் உணர் முடியாதா...தேவனுடைய பிரசன்னத்திலிருந்து இனிமையான, புத்துணர்ச்சியூட்டும், கீழே வந்து, அதற்கு நீர் பாய்ச்சுதல், "இப்பொழுது, இங்கே, பிள்ளையே, நான்-நான் என்னுடைய வார்த்தையோடு வருகிறேன். நான் என்னுடைய வார்த்தையை கனப்படுத்துகிறேன். நான் அதை இரவும் பகலும் கவனித்து வருகிறேன், நான் அதை இப்பொழுது உங்களுடைய இருதயத்தில் ஊற்றிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டு என்னை விசுவாசிக்க முடியாதா?" என்று கேளும். எல்லாக் காரியங்களும் (என்ன?) கூடும், விசுவாசிக்க மாத்திரமே செய்யுங்கள். 188. என்னே! எவ்வளவு அற்புதமானது! விதைகளின் மேல் தண்ணீர் இறங்கி வருவதை உணர்வது எவ்வளவு அற்புதமானது! அது என்ன? நீதியான வித்து, அது உங்களுடைய இருதயத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. அதுதான் வித்து. அதுதான் பரிசுத்த ஆவி. தேவன் ஆதியிலே வாக்குத்தத்தம் செய்த வித்து. நீங்கள் கிறிஸ்துவுக்குள் மரித்து, ஆபிரகாமின் வித்தை ஏற்றுக்கொண்டு, வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரவாளிகளாயிருப்பதனால், நீங்கள் ஆபிரகாமின் வித்தாயிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் ஆபிரகாமின் வித்திலிருந்து வந்தார், அதுவே உங்களை தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக ஆக்குகிறது. 189. இப்பொழுது, அதுதான் நீங்கள் சற்று நேரத்திற்கு முன்பு எடுத்த வாக்குறுதிக்கு பரிசுத்த ஆவியானவரே நீர் பாய்ச்சுதல், உங்களுடைய சுகமளித்தலுக்காகவும், உங்களுடைய இரட்சிப்பிற்காகவும், ஒரு மேலான சஞ்சரித்தலுக்காகவும், உங்களை விட்டு வெளியேற பயப்படுவதற்கு, உங்களுக்கு என்ன தேவையாயிருந்தாலும்; அந்த பயணத்திற்காக தீவுகளை நோக்கி, அந்த பயணத்திற்காக இஸ்ரேலின் தாயகத்திற்கு; உங்களுடைய சபைக்கு, உங்களுடைய இடத்திற்கு, அது எங்கிருந்தாலும், உங்களுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். அதுதான் பரிசுத்த ஆவியானவர், "அது நான். நான் உங்களோடு இருக்கிறேன். தொடர்ந்து செல்லுங்கள். நான் வழி நடத்திக் கொண்டிருக்கிறேன். நீங்கள், நீங்கள் தொடர்ந்து அசைந்து கொண்டேயிருங்கள். அது நானே" என்று கூறுகிறார். உனக்காக கன்மலையில் தேன் இருக்கிறது; உங்களுடைய பாவத்தை இரத்தம் மறைக்கும்படி விட்டுவிடுங்கள், உனக்காக கன்மலையில் தேன் உள்ளது. நாம் எழுந்து நிற்போம். ஓ, தெருக்களுக்குச் செல்லுங்கள் மற்றும் வழியே செல்லுங்கள், வார்த்தையை பிரசங்கியுங்கள்...(நீங்கள் கூற விரும்பும் ஏதாவது உண்டா?) விழுந்துபோன ஒவ்வொரு சகோதரனிடமும், உனக்காக கன்மலையில் தேன் உள்ளது. ஓ, என் சகோதரனே, கன்மலையில் உள்ள தேன் உள்ளது. உனக்காக கன்மலையின் தேன் உள்ளது; உங்கள் பாவங்களை இரத்தத்தினால் மறைக்க விட்டுவிடுங்கள், உனக்காக கன்மலையில் தேன் உள்ளது என்று கூறுங்கள். 190. இப்பொழுது, பாருங்கள், நீங்கள் இன்னும் செல்ல விரும்பவில்லை. உங்களுக்கு அருகில் யாராவது நிற்பதை நீங்கள் கண்டு, உங்களுடைய கரத்தைக் குலுக்கி, "சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று கூற வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அல்லது சகோதரி, அது யாராயிருந்தாலும் சரி. அப்படியே சுற்றித் திரும்புங்கள். இது ஒரு சிறிய பழைய ஸ்தாபனங்களுக்கிடையேயான கூடாரமாகும். நாம் விநோதமான ஜனங்களாகிய நம்முடைய பயணத்தில் இருக்கிறோம். சரி. இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், துன்பமும் துயரமுமான பிள்ளை; அது உங்களுக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் அளிக்கும், நீங்கள் எங்கு சென்றாலும் அதைக் கொண்டு செல்லுங்கள். விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!) எவ்வளவு இனிமையானது! (ஓ எவ்வளவு இனிமையானது!) பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமும்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமும். இப்பொழுது ஒவ்வொருவரும் இந்த பக்கமாக நோக்கிப் பாருங்கள். இயேசுவின் நாமத்தில் தலைவணங்கி, அவருடைய பாதத்தில் விழுந்து பணிந்து, பரலோகத்தில் ராஜாதி இராஜாவாக நாம் அவருக்கு முடிசூட்டுவோம், நம்முடைய யாத்திரை முடிவுறும்போது. விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்,) ஓ எவ்வளவு இனிமையானது! (ஓ எவ்வளவு இனிமையானது!) பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமும்; விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!) ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும் சந்தோஷமும் (?) 191. இப்பொழுது நாம் கர்த்தராகிய இயேசுவுக்கு நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில். இது ஒரு மகத்தான யூபிலி, ஒரு பெரிய விருந்து, வார்த்தையின் பேரிலும், அவருடைய பரிசுத்த ஆவியின் பேரில் தேவனுடைய காரியங்களின் பேரிலும் ஒரு பெந்தேகோஸ்தே விருந்து. இப்பொழுது ஊழியக் களத்திற்கு சென்று கொண்டிருக்கும் எங்களுடைய மிஷனரி சகோதரர்களுக்கு தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக நாங்கள் ஜெபிக்க விரும்புகிறோம், தேவன் அவர்களை சரியாக வாழ்த்துவாராக. நாங்கள் உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறோம்; சகோதரனே, சகோதரியே, நாங்கள் உங்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய மனைவிகள், அவர்களுடைய அன்பார்ந்தவர்கள், அந்த பெண்கள் என்ன துன்பத்தினூடாக சென்று கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய சொந்த மனைவி மூலமாய் இருந்ததை நான் அறிவேன். 192. இங்குள்ள போதகர்களுக்கு, சகோதரன் ஜாக்ஸன் மற்றும்- மேலும் அங்கே பின்னால் உள்ள சகோதரர் பீலர் இருக்கிறார் என்று நான் யூகிக்கிறேன், மற்ற அநேக போதகர்களும் உள்ளனர். இங்கே பின்னால் உள்ள டெடி, ஒரு வாலிப ஊழியக்காரர். இங்குள்ள இன்னும் அநேகர், நாங்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கிறோம். தேவனுடைய சபையில் உள்ள, ஒரு வாலிப சகோதரனை இங்கே, நாம் இன்று பிற்பகலில் காணப்போகிறோம். நாங்கள் அவர் மீது ஆசிர்வாதங்கள் இருக்க ஜெபிக்கிறோம், சுவிசேஷகரே, அது அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன். இல்லையா, சகோதரனே? உங்களுடைய பெயர் என்ன? [அந்த சகோதரன், "மார்கன்" என்கிறார்.-ஆசி.) சகோதரன் மார்க்-... ("மார்கன்.") மார்கன், சகோதரன் மார்கன். அவர்கள் யாவரும் இங்கே இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! 193. இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளை அவருக்கு இப்பொழுது வணங்கி, நோக்கிப் பார்க்கையில். கட்டிடத்தின் பின்புறத்தில் ஒரு தாழ்மையான சகோதரன் நின்று கொண்டிருக்கிறார். அவர் ஒரு சிறிய வண்டியை இழுத்து தேசம் முழுவதும் இழுத்துச் செல்கிறார் என்பதை, நான் அறிவேன். அவர்களில் அநேகர் அவனை "தீர்க்கதரிசி ஜான்" என்றே அறிவார்கள். நாம் அவரை 'சகோதரன் ஜான்" என்று அழைக்கிறோம். அந்த மனிதன் மீது எனக்கு எப்பொழுதுமே மரியாதை உண்டு. ஆனால், அன்றொரு நாள் நான் என்னுடைய நண்பர்கள் சிலரை சந்திக்கச் சென்றிருந்தேன், அது சகோதரன்...சகோதரி ஜிம்மி ஓ நீல், செல்லர்ஸ்பர்க்கில் இருக்கிறார். அது சகோதரன் மற்றும் சகோதரி கிரீன் ஆகியோரின் மருமகன். அவர்கள் இன்று காலை வந்துள்ளனர். சகோதரன் ஜான் அவர்களுடைய வீட்டில் இருந்தார், அவர் என்ன ஒரு உண்மையான கிறிஸ்தவ பெருந்தன்மையுள்ளவர் என்பதை அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர் தங்களிடத்தில் என்ன கூறினார் என்பதையும், அவர் எப்படி கடினமான சோதனைகளினூடாக மேலே வந்தார் என்பதையும் அவர்கள் அவருடைய ஜீவியத்தை எனக்குக் கூறினர். அவர் ஒரு கடினமான வழியை உடையவராயிருந்தார். நாம் இந்தக் காலையில், அவர் இந்த சபையை கலைந்து செல்லும்படி அனுப்பி வைப்பாரா என்றும், இந்த சபையோரின் மேல் தேவனிடத்திலிருந்து அவனுடைய ஆசீர்வாதங்களை வேண்டிக்கொள்வாரா எனறும் அவரைக் கேட்கப் போகிறோம். சகோதரன் ஜானி, நீர் அதை எங்களுக்காக செய்வீரா? நீங்கள் யாவரும் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில். மேலும், சகோதரன் ஜான், நீர் எங்களை ஜெபத்தில் கலைந்து செல்லும்படி செய்தால் நலமாயிருக்கும்.